கிராமத்துப் பெண்ணை கற்பழிக்க முயன்ற நீதிபதி

Subscribe to Oneindia Tamil

ஓசூர்:

கிராமத்துப் பெண்ணைக் கற்பழிக்க முயற்சி செய்ததாக தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு குற்றவியல் நீதிபதி மீதுபொது மக்கள் போலீஸில் புகார் செய்துள்ளனர்.

பாலக்கோடு அருகே உள்ளது காவாப்பட்டி கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த செல்வி என்ற பெண்ணின்கணவர் மீது கள்ளச் சாராய வழக்கு உள்ளது. இந் நிலையில் சனிக்கிழமை மாலை, பழனி என்பவர் செல்வியைஅணுகி, வழக்கு தொடர்பாக பேசுவதற்காக மாஜிஸ்திரேட் கூப்பிட்டதாக கூறியுள்ளார். ஆனால் செல்வி வரமறுத்துள்ளார்.

பின்னர் இரவு 10.30 மணியளவில் செல்வி வீட்டின் கதவு தட்டப்பட்டுள்ளது. திறந்து பார்த்தபோது, மாஜிஸ்திரேட்நின்று கொண்டிருந்தார். கதவைத் திறந்து உள்ளே வந்த அவர் செல்வியை கற்பழிக்க முயற்சி செய்ததாககூறப்படுகிறது.

அவரது கூக்குரல் கேட்ட கிராமத்தினர் ஒன்று திரண்டு அங்கு கூடி மாஜிஸ்திரேட்டை வளைத்துப் பிடித்தனர்.பின்னர் ஊர் நடுவில் அவரை நிற்க வைத்தனர்.

பின்னர் பாலக்கோடு போலீஸில் செல்வி புகார் கொடுத்தார்.

ஆனால், தன்னை காவாப்பட்டி கிராமத்தினர் கடத்திச் சென்று ஊரில் கட்டிப் போட்டதாக மாஜிஸ்திரேட்டும்போலீசில் ஒரு புகார் கொடுத்தார்.

இரு புகார்களையும் வாங்கிய காவல்துறையினர் அவற்றை மாவட்ட நீதிபதி, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிஆகியோருக்கு அனுப்பி வைத்து அவர்களது ஆலோசனைக்காக காத்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+