இப்படித் தான் படம் எடுக்கனும்: ரூல் போடுகிறாரா கிருஷ்ணசாமி?
சென்னை:
தமிழ் சினிமாக்களில் இனிமேல் ஆபாசம், வன்முறை இருக்கக் கூடாது. அப்படி மீறி எடுத்தால் நடப்பதே வேறுஎன்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மிரட்டியுள்ளார்.
சண்டியர் படத்தை எதிர்த்து திடீர் பரபரப்பை ஏற்படுத்திய டாக்டர் கிருஷ்ணசாமி இன்று சென்னையில்செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழர்களைப் பொறுத்த வரை திரைப்படங்களை வெறும் பொழுது போக்கு அம்சமாக மட்டுமாக மட்டும் அவர்கள்எடுத்துக் கொள்வதில்லை. சினிமா, தமிழர்களின் சமூக உணர்வுகளின் மீது ஆதிக்கம் செலுத்தி வருகிறது.சினிமாவில் சொல்வதை நம் இளைஞர்கள் அடி மனதில் வாங்கிக் கொள்கிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் ஆபாசமான பாட்டு, நடனம், வன்முறையைத் தூண்டும் வீச்சரிவாள் கலாச்சாரம், ஜாதியகுறியீடுகளுடன் வரும் சினிமாக்கள் வளர்ந்த சமூகத்தை பின்னுக்குத் தான் தள்ளும். இப்படிப்பட்ட தமிழ்ப்படங்கள் எடுக்கப்படக் கூடாது என்று தான் சொல்கிறோம். இப்படிப்பட்ட படங்களைத் தான் எதிர்க்கிறோம்.
சினிமாக்கள் சமூகத்தை திருத்தும் வகையில் இருக்க வேண்டும். ஆனால் இப்போது வரும் படங்கள், சமூகத்தைசீரழிக்கும் வகையில் உள்ளன. இத்தகைய படங்களை எதிர்த்து விரைவில் பெரும் இயக்கம் தொடங்கஇருக்கிறோம்.
உண்மைக் கதை என்று சொல்லி புரட்டுக் கதைகளைச் சொல்லும் சினிமாக்களை இனி நாங்கள் அனுமதிக்கமாட்டோம். இதற்கு உதாரணம் சீவலப்பேரி பாண்டியைச் சொல்லலாம். இனி இப்படிப்பட்ட படங்கள் வருவதைத்தடுப்போம்.
இனி அப்படி படம் எடுக்கட்டும். அதன் பிறகு நடப்பதைப் பாருங்கள்.
கமல்ஹாசன் தனது சண்டியர் படத்தின் பெயரை மாற்றுவதாக கூறியுள்ளதை வரவேற்கிறேன். மக்களுக்கு நல்லதுசெய்ய வேண்டும் என்று நினைத்து அவர் படம் எடுப்பார் என்று நம்புகிறேன். இந்தப் பட சர்ச்சைக்கு நான் முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன்.
கமலுக்கு ஒரே ஒரு கோரிக்கை. போஸ்டர்களில் வீச்சரிவாள்கள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். இனி படம்வெளிவந்த பிறகு அதில் உள்ள காட்சிகளைப் பார்த்த பின்னர் தான் கருத்து சொல்வோம். எங்கள் நடவடிக்கையும்அதைப் பொறுத்தே அமையும் என்றார் கிருஷ்ணசாமி.
சண்டியர் படத்தை எதிர்த்த கிருஷ்ணசாமி இப்போது ஒட்டுமொத்த தமிழ்த் திரைப்படங்களும் இப்படித்தான்இருக்க வேண்டும் என்று ரூல் போடுவது போலப் பேசியுள்ளது தமிழ்த் திரையுலகில் கொந்தளிப்பை ஏற்படுத்தும்என்று தெரிகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications