என்னை விட அவர்களுக்கு சங்கராச்சாரியார் பெரியவாள்: கருணாநிதி
திருச்சி:
முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான டான்சி வழக்கில் விசாரணை முடிந்த பிறகு பல மாதங்களாகிவிட்ட பின்னரும்உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்காமல் இருப்பது குறித்து கருத்துத் தெரிவிக்க திமுக தலைவர் கருணாநிதிமறுத்துவிட்டார்.
திருச்சியில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது மகன் அழகிரியைச் சந்திக்கச் செல்லும் முன் ஹோட்டலில்நிருபர்களிடம் கருணாநிதி கூறியதாவது:
50 ஆண்டுகளுக்கு முன் கல்லக்குடி போராட்டத்தில் கைதாகி நான் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டேன்.அப்போது கைக் குழந்தையாக இருந்த அழகிரியைத் தூக்கிக் கொண்டு என் மனைவி தயாளு சிறையில் என்னைக்காண வந்தார். இன்று அதே சிறைக்கு அழகிரியைக் காண நான் வந்திருக்கிறேன்.
நதிகள் இணைப்புக்கு பிகார், கேரளம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவிப்பது சரியல்ல.நதிகள் இணைப்பு என்பது மாநில விஷயமே அல்ல. அது தேசிய நலன் தொடர்பான விஷயம்.
இதனால் சில மாநிலங்கள் எதிர்ப்பதாகச் சொல்லி இத் திட்டத்தை கைவிடுவது போன்ற செயல்களில் யாரும்ஈடுபடக் கூடாது. நதிகள் இணைப்பு தடுக்கப்படுவது தேசிய நலனுக்கு எதிரானது.
கங்கையையும் காவிரியையும் இணைக்காவிட்டாலும் கூட பரவாயில்லை, பக்கத்தில் உள்ள நதிகளை கட்டாயம்இணைத்தே ஆக வேண்டும்.
மத்திய அமைச்சர்கள் ஜஸ்வந்த் சிங்கும், ஜார்ஜ் பெர்னாணடசும் சென்னை வழியாக காஞ்சிபுரம் சென்றுசங்கராச்சாரியாரைச் சந்தித்துவிட்டுப் போயிருக்கிறார்கள். என்னை சந்திக்கவில்லையே ஏன் என்று கேட்கிறார்கள்.ஒரு வேளை என்னை விட சங்கராச்சாரியார் அவர்களுக்கு பெரியவாள்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் திமுகவின் உறவு தொடரும். மாநிலத்தில் பா.ஜ.கவுடன் எந்த உறவும் இல்லை.
முரசொலி மாறனின் உடல் நிலை சொல்லிக் கொள்ளும் அளவுக்கு தேறவில்லை.
அரசு ஊழியர்களின் போராட்டம் நியாயமனது. புதிய கோரிக்கைகளுக்காக அவர்கள் போராடவில்லை. இருந்தசலுகைகளை இழந்து விட்டு அதை மீட்க போராடுகிறார்கள். அவர்களது போராட்டத்திற்கு திமுக உறுதியானஆதரவு அளிக்கும் என்றார் கருணாநிதி.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications