சங்கிலி பறித்தவனை சைக்கிளில் விரட்டி பிடித்த பெண்
சென்னை:
தனது கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு ஓடிய திருடனை, சைக்கிளில் துரத்திச் சென்றுபிடித்து போலீஸில் ஒப்படைத்தார் ஒரு பெண்.
சென்னை ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி. இவர் தனது சைக்கிளில் சிட்கோ நகர் மெயின் ரோட்டில்சென்று கொண்டிருந்தார். அப்போது வேகமாக வந்த ஒருவன், லட்சுமி கழுத்தில் கிடந்த ரூ. 12,000 மதிப்புள்ளதங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு ஓடினான்.
உடனே, தனது சைக்கிளில் அந்தத் திருடனை துரத்தினார் லட்சுமி. சாலையில் சென்று கொண்டிருந்தவர்களும்லட்சுமிக்கு உதவியாக திருடனைத் துரத்தினர். சிறிது தூரம் சென்ற பிறகு, திருடன் மீது சைக்கிளை மோதி அவனைப்பிடித்தார் லட்சுமி. அவனிடம் இருந்து சங்கிலியையும் மீட்டார்.
பின்னர் அனைவரும் சேர்ந்து திருடனைப் பிடித்து தர்ம அடி தந்து போலீஸில் பிடித்துக் கொடுத்தனர்.
பிடிபட்ட சங்கிலித் திருடன், வேளச்சேரி நேரு நகரைடச் சேர்ந்த தங்கமணி என்று போலீஸார் தெரிவித்தனர்.திருடனை சைக்கிளில் துரத்தி பிடித்த லட்சுமியை போலீஸார் பாராட்டினர்.












Click it and Unblock the Notifications