வைகோவைச் சந்தித்தார் ப.சிதம்பரம்
வேலூர்:
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர்வைகோவை காங்கிரஸ் ஜனநாயகப் பேரவைத் தலைவர் ப.சிதம்பரம் இன்று சந்தித்தார்.
இன்று காலை இச் சந்திப்பு நடந்தது. சுமார் அரை மணி நேரம் வைகோவுடன் பேசிக் கொண்டிருந்த சிதம்பரம்பின்னர் வெளியே நிருபர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தன் மீது சிபிஐ குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்த பின்னரும் கூட துணைப் பிரதமர்அத்வானி தனது பதவியை ராஜினாமா செய்யாமல் இருப்பது அரசியல் அசிங்கம்.
ஒன்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும், அல்லது சிபிஐ இயக்குனரையாவது ராஜினாமாசெய்யச் சொல்லியிருக்க வேண்டும். தன் மீதான குற்றச்சாட்டை விசாரிக்கும் சிபிஐயை தன் வசம் வைத்துக்கொண்டிருக்கிறார் அத்வானி. இது போன்ற அரசியல் வினோதம் இந்தியாவில் மட்டுமே சாத்தியம்.
ஈராக்குக்கு இந்தியப் படைகளை அனுப்பலாம். ஆனால், அது ஐ.நாவின் தலைமையில் அனுப்பப்பட வேண்டும்.அமெரிக்காவின் தலைமையில் இந்தியப் படைகள் ஏவல் வேலை செய்ய வேண்டியதில்லை. இது குறித்தும்வைகோவிடம் பேசினேன். அவரும் அதே கருத்தைத் தான் கொண்டிருக்கிறார்.
காங்கிரசுடன் எங்கள் கட்சி இணையாது. ஆனால், மூன்றாவது அணியில் எங்களுடன் காங்கிரசும் இருக்கவேண்டும். சோனியா காந்தியுடன் நான் பேசியது குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை.
பொடா சட்டத்தை மறு ஆய்வு செய்ய கமிட்டி போட்டிருக்கிறோம் என்று சொல்லி நேரத்தைக் கடத்திஎல்லோரையும் ஏமாற்றும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இந்தக் கமிட்டிக்கு ஆய்வுக்கான காலக்கெடுஏதும் விதிக்கப்படவில்லை.
உலக வர்த்தக அமைப்பில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும் என்று குரல்கள் எழ ஆரம்பித்துள்ளன. இந்தக்குரலைத் தருபவர்கள் கிணற்றுத் தவளைகளாகத் தான் இருக்க வேண்டும். சுதந்திரமான வர்த்தகத்துக்குத் தான் இனிஎதிர்காலமே என்றார் ப.சிதம்பரம்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications