வீரப்பன் அபாயம்: வனப் பகுதிக்கு அருகே செல்ல எம்.பி, 2 எம்.எல்.ஏக்களுக்கு தடை
சத்தியமங்கலம்:
வீரப்பனின் கடத்தல் திட்டம் அம்பலமாகியுள்ளதால், கர்நாடகத்தைத் தொடர்ந்து தமிழக அரசும் வி.ஐ.பிக்களுக்குபுதிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. காட்டுப் பகுதிக்குச் செல்ல ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த எம்.பி. மற்றும்எம்.எல்.ஏக்களுக்கு அரசு தடை விதித்துள்ளது.
சந்தனக் கடத்தல் வீரப்பன் முக்கியப் புள்ளிகளை கடத்தத் திட்டமிட்டிருப்பதாக கர்நாடக உளவுப் பிரிவினருக்குத்தகவல் கிடைத்துள்ளது. மேலும் வனப் பகுதியில் கடும் மழை பெய்து வருவதால் அதிரடிப்படையினரின் தேடுதல்வேட்டையும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் வீரப்பன் காட்டுப் பகுதிகளை ஒட்டிய பகுதிகளுக்குள் எளிதில் நடமாட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.இதையடுத்து வனப் பகுதிகளுக்கோ, அதை ஒட்டிய பகுதிகளுக்கோ செல்ல வேண்டாம் என வி.ஐ.பிக்கள்,அரசியல்வாதிகள், அதிகாரிகள், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு கர்நாடகம் எச்சரிக்கைவெளியிட்டுள்ளது.
அப்படியே போக வேண்டிய அவசியம் ஏற்பட்டாலும் போலீஸ் பாதுகாப்புடன் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளது.
இந் நிலையில் இதே எச்சரிக்கையை தமிழக அரசும் பிறப்பித்துள்ளது. குறிப்பாக வனப் பகுதியை ஒட்டியுள்ளகோபிசெட்டிப்பாளையம் எம்.பி, மற்றும் 2 எம்.எல்.ஏக்கள் காட்டுக்குள் செல்லவும், வனப் பகுதிகளை ஒட்டியஇடங்களுக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோபிசெட்டிப்பாளையம் எம்.பி காளியப்பன், சத்தியமங்கலம் எம்.எல்.ஏ. கந்தசாமி, பவானி எம்.எல்.ஏ. சிதம்பரம்ஆகியோர் வீரப்பனின் கடத்தல் லிஸ்டில் இருப்பதாகவும், எனவே எக் காரணம் கொண்டும், வீரப்பன் நடமாட்டம்உள்ள காட்டுப் பகுதிக்குள் செல்ல வேண்டாம் என்றும் போலீசார் இவர்களுக்குத் தடை விதித்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications