பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள அரசு ஊழியர்கள் நிபந்தனை
சென்னை:
தமிழக அரசின் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள வேண்டுமானால், ஜாக்டியோ ஜியோ மற்றும் கோட்டோஜியோ அமைப்புகளுக்கு ஒரே அழைப்பிதழ் அனுப்ப வேண்டும் என்று அரசு ஊழியர்கள், ஆசியர்கள் சங்கத்தினர்அரசுக்கு நிபந்தனை விதித்துள்ளனர்.
ஜூலை 2ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்ய அரசு ஊழியர்கள் மற்றும் ஆசியர்கள் முடிவுசெய்துள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் பள்ளிகள் மூடப்படும் அபாயமும் மாநில நிர்வாகம் ஸ்தம்பிக்கும்நிலையும் ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து வரும் 27ம் தேதி அரசு ஊழியர்கள், ஆசியர்களுடன் பேச்சு நடத்த தமிழக அரசு முடிவுசெய்துள்ளது. இதில் கலந்து கொள்ளுமாறு சில சங்க நிர்வாகிகளுக்கு மட்டும் அரசுத் தரப்பில் தொலைபேசி மூலம்நேற்று அழைப்பு விடப்பட்டது. முக்கிய நிர்வாகிகளை அழைக்கவில்லை.
இதன் மூலம் சங்கங்களில் குழப்பத்தை உருவாக்கும் முயற்சிகளில் அரசு ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.
அரசின் இந்தச் செயலுக்கு முக்கிய சங்கங்களான ஜாக்டியோ ஜியோ மற்றும் கோட்டா ஜியோ ஆகிய அமைப்புகள்கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இரு அமைப்புகளுக்கும் ஒரே அழைப்பு, அதுவும் எழுத்துப் பூர்வமான அழைப்புஅனுப்பப்பட்டால்தான் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வோம் என்று இவை அறிவித்துள்ளன.
இரு அமைப்புகளின் பிரதிநிதிகளும் இன்று காலை தலைமைச் செயலகத்தில், பணி மற்றும் நிர்வாக சீர்திருத்தப்பிரிவுச் செயலாளர் மெய்கண்டதேவனைச் சந்தித்து, முறையாக பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் மட்டுமேவருவோம். இல்லாவிட்டால் திட்டமிட்டபடி ஸ்டிரைக் தான் என்று கூறிவிட்டுத் திரும்பினர்.
இதையடுத்து கோரிக்கை ஏற்று முறையான கடிதம் அனுப்புவதாக அவர்களிடம் மெய்கண்டதேவன்உறுதியளித்தார்.


