வீடு திரும்பினார் டி.எம்.எஸ்.
சென்னை:
எரி சாராயத்தைக் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னணிப் பாடகர் டி.எம்.செளந்தரராஜன் வீடுதிரும்பினார்.
2 நாட்களுக்கு முன் டி.எம்.செளந்தரராஜன் ஆபத்தான நிலையில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார். எரிசாரயம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக போலீஸ் கூற, அதை டி.எம்.எஸ். குடும்பம்மறுத்தது.
இந் நிலையில் பூரண குணமடைந்த அவர் வீடு திரும்பிவிட்டார். வீட்டில் நிருபர்களைச் சந்தித்த அவர்பேசியதாவது:
எத்தனையோ பாடல்களைப் பாடி விட்டேன். மிகப் பெரியவர்களுக்காக எல்லாம் பாடியுள்ளேன். எனக்குதற்கொலை செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை, அந்த எண்ணம் வரவும் நியாயமில்லை.
எனது அறையில் இருமல் மருந்து, காய்ச்சல் மருந்து என அனைத்து மருந்துகளும் ஒரே இடத்தில்தான்வைக்கப்பட்டிருக்கும். அதுபோலவே, காயத்திற்காக போடப்படும் எரிசாராயமும் (டிங்ச்சர்) வைக்கப்பட்டிருந்தது.கண்ணாடி போடாமல் இருமல் மருந்து என்று நினைத்து எரிசாராயத்தை சாப்பிட்டு விட்டேன்.
உடனடியாக என்னை மருத்துவமனையில் சேர்த்து விட்டார்கள். இப்போது குணமடைந்து விட்டேன். காலையில்நன்றாக சாப்பிட்டேன். இன்னும் ஒரு மாதத்தில், மறுபடியும் மேடைக் கச்சேரிகளுக்குச் செல்லவுள்ளேன் என்றார்.
வீடு திரும்பிய டி.எம்.செளந்தரராஜனை திரையுலகத்திலிருந்து ஒருவர் கூட வந்து பார்க்கவில்லை என்பதுவருத்தத்துக்குரிய உண்மை.


Click it and Unblock the Notifications
