For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெவுடன் மாஜி மதிமுக மாவட்ட செயலாளர் சந்திப்பு: வைகோ சொத்து குறித்து விசாரிக்க கோரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Lakumananமதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றுதிருநெல்வேலி மாவட்ட முன்னாள் மதிமுக செயலாளர் லக்குமணன் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்துகோரிக்கை விடுத்துள்ளார்.

மதிமுக மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து லக்குமணனை சில மாதங்களுக்கு முன் நீக்கினார் வைகோ. அன்றுமுதல் வைகோ மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறார் லக்குமணன். குறுப்பாக வைகோ ரூ. 70கோடியளவுக்கு சொத்து குவித்திருப்பதாகவும் அது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துவந்தார்.

இந் நிலையில் திசை மாறிய வைகோ என்ற புத்தகத்தையும் அவர் எழுத ஆரம்பித்துள்ளார். சுமார் 300 பக்கங்கள்கொண்ட இந்தப் புத்தகத்தில் வைகோவின் கடந்த காலத்தில் ஆரம்பித்து யாழ்பாணத்துக்குச் சென்றது, திமுகவில்சந்தித்த அவமானங்கள், இப்போது சிறை சென்றது வரை ஏதோதோ எழுதியிருக்கிறார்.

கருணாநிதிக்கு எதிராக சதி செய்ததாகவும், யாழ்பாணம் சென்று வந்த பின்னர் வைகோவுக்கு சொத்துக்கள்குவிந்ததாகவும் அதில் கூறியிருக்கிறார்.

போதாக்குறைக்கு ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமியையும் சந்தித்து, வைகோ தொடர்பாகஆவணங்களைத் திரட்டியுள்ளதாகவும் லக்குமணன் கூறி வருகிறார். இந்தப் புத்தகம் வரும் 27ம் தேதி வெளிவரும்என்று அறிவித்துள்ளார் லக்குமணன்.

இந் நிலையில் முதல்வர் ஜெயலலிதாவை தனது மனைவியுடன் அவர் சந்தித்தார்.

அப்போது புத்தக்ததில் கூறியுள்ள விவரங்களை ஒரு மனுவாக ஜெயலலிதாவிடம் அவர் வழங்கினார். அதில்,வைகோ சேர்த்துள்ள சொத்துக்கள் குறித்தும், விடுதலைப் புலிகளுடன் அவருக்கு உள்ள தொடர்புகள் குறித்தும்விசாரணை நடத்த வேண்டும் என்று லக்குமணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆரம்ப காலத்தில் பஸ்சில் சென்று வந்த வைகோவுக்கு இப்போது ரூ. 70 கோடிக்கு சொத்துக்கள் இருப்பதாகவும்,கேஸ் ஏஜென்சிகள் இருப்பதாகவும், தமிழகம் தவிர ஆந்திரம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பினாமி சொத்துக்கள்இருப்பதாகவும், இந்தச் சொத்துக்கள் எப்படி வந்தன என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

கலிங்கப்பட்டியில் பால் பண்ணையும் விவாசய நிலங்கள் இருப்பதாக வைகோ கூறுவது தவறு என்றும் அந்தமனுவில் லக்குமணன் கூறியுள்ளார்.

மதிமுகவைத் தொடங்கியபோது அண்ணாநகர் அய்யப்பன் கோவில் அருகே வாடகை வீட்டில் வசித்தவைகோவுக்கு இப்போது அதே பகுதியில் மிகப் பெரிய பங்களா உள்ளது. பஸ்சில் பயணம் செய்து வந்தவைகோவுக்கு இன்று பல கார்கள் உள்ளன என்றும் அவர் அந்த மனுவில் கூறியுள்ளார்.

ஜெயலலிதாவைச் சந்தித்துவிட்டு வந்த பின் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கட்சித் தலைமைக்கும்,பிரதமருக்கும் தெரிவிககாமல்1980களில் யாழ்ப்பாணத்திற்கு கள்ளத் தோணி மூலம் சென்று வந்தார் வைகோ.

தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை அவர் சந்தித்தார். இது தொடர்பாக திமுக ஆட்சியாளர்கள் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.யாகஇருந்த வைகோ, இந்திய அரசியல் சட்டத்திற்கு விரோதமாக, இந்திய இறையாண்மையை மீறி நடந்து கொண்டார்.

வைகோவுக்கு எதிராக பேச ஆரம்பித்ததில் இருந்து எனக்கும், எனது மனைவிக்கும் தொடர்ந்து கொலைமிரட்டல்கள் வந்து கொண்டுள்ளன. எனவே போலீஸ் பாதுகாப்பு அளிக்குமாறு முதல்வடம் கோக்கைவிடுத்துள்ளேன் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X