ஜெயலலிதாவுக்கு டாக்டர் பட்டம்: கோவையில் எங்கும் பச்சை மயம்
கோயம்புத்தூர்:
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இன்று நடக்கும் பட்டமளிப்பு விழாவில் தமிழக முதல்வர்ஜெயலலிதாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.
இதையொட்டி கோவையில் பல்கலைக்கழகத்துக்குச் செல்லும் வழிகள் அனைத்திலும் ஜெயலலிதாவுக்கு ராசியானபச்சைத் தோரணங்கள் தொங்க விடப்பட்டுள்ளன. சுவர்கள் முழுவதும் பச்சை போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
பாலங்களின் தூண்களைக் கூட விடவில்லை. அவையும் பச்சைக்கு மாறிவிட்டன.
மாலை 4 மணிக்கு நடக்கும் பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமானராம்மோகன் ராவ் ஜெயலலிதாவுக்கு கெளரவ டாக்டர் ஆஃப் சயின்ஸ் பட்டம் வழங்குகிறார்.
பட்டம் பெற்றபின் ஜெயலலிதா பட்டமளிப்பு உரையாற்றுகிறார். விழாவில் பங்கேற்க தமிழக ஆளுநர்ராம்மோகன் ராவ் தனி விமானம் மூலம் இன்று காலை கோவை வந்தார். ஜெயலலிதா தனி ஹெலிகாப்டரில்கோவை வந்திங்குகிறார்.
பீளமேடு விமான நிலையத்தில் ஜெயலலிதாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அங்கிருந்து கார்மூலமாக ரெஸிடென்ஸி ஹோட்டலுக்குச் செல்லும் ஜெயலலிதா சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு, வேளாண்பல்கலைக்கழகம் செல்வார்.
விவசாயத்துறையில் புரட்சி செய்ததாகக் கூறி இந்த டாக்டர் பட்டம் ஜெயலலிதாவுக்கு வழங்கப்படுகிறது.


