ஆசிரியரின் கந்து வட்டிக்குப் பலியான தலைமை ஆசிரியர்

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசியர் ஒருவர் கந்து வட்டிக் கொடுமைக்குப் பயந்து தற்கொலைசெய்து கொண்டுள்ளார்.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால். ஓய்வு பெற்ற தலைமை ஆசியர். இவர் அர்ஜூனன் என்ற ஆசிரியடம்2000மாவது ஆண்டு ரூ. 80,000 கடன் வாங்கினர். அதற்கு ரூபாய்க்கு 2 வட்டி என்று பத்திரம் எழுதி வாங்கிக்கொண்டார்.

ஆனால், கூறியபடி இல்லாமல் 6 வட்டி வாங்கினார் அர்ஜூனன். இதனால் வட்டி கட்டி முடியாமல் தவித்தார்ராஜகோபால்.

பலமுறை வட்டியைக் குறைக்கக் கோரியும் அர்ஜூன் மசியவில்லை. மேலும், வட்டிக்கு வட்டி என்று கந்து வட்டிவசூலிக்க ஆரம்பித்தார். இதனால் வாங்கிய கடன் ரூ. 80,000 போக, மேலும் ரூ. 50,000 தர வேண்டும் என்றுவற்புறுத்த ஆரம்பித்தார் அர்ஜூனன்.

அர்ஜூனனுக்கு சில போலீசாரின் ஆதரவும் இருந்தது. இதனால் அவரை எதிர்க்கவும் முடியாமல் தவித்தார்ராஜகோபால்.

வட்டிக் கொடுமை அதிகரிக்கவே மனம் நொந்த ராஜகோபால் பூச்சி மருந்து குடித்துத் தற்கொலை செய்துகொண்டார்.

சாவதற்கு முன் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், ஆசிரியர் அர்ஜூனன்,போலீஸாரின் பெயரை சொல்லி மிரட்டி வந்ததால் வேறு வழி தெரியாமல் தற்கொலை செய்து கொள்வதாககுறிப்பிட்டுள்ளார்.

கந்து வட்டிக்கு தலைமை ஆசிரியர் பலியானது அப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர்வேலையை பார்ட் டைமாகவும், வட்டித் தொழிலை முக்கிய வேலையாகவும் பார்த்து வந்த கந்து வட்டி ரெளடிஅர்ஜூனன் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+