ஆண் வாரிசு ஆசை: 18 வயது பெண்னை மணம் முடித்த 60

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

ஆண் வாரிசு வேண்டும் என்று சொல்லி, தனது மருமகனின் 18 வயது தங்கையையே திருமணம்செய்து கொண்டுள்ளார் 60 வயது பெரிசு ஒருவர்.

திருச்சி அருகே உள்ள ஆவூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் தாண்டவன் உடையார் (வயது 60).32வது வயதில் முதலில் திருமணம் செய்து கொண்டார். அடுத்தடுத்து 4 குழந்தைகள் பிறந்து,அனைத்துமே சில நாட்களில் இறந்துவிட்டன.

உடனே மனைவியுடன் லோக்கல் சாமியாரைச் சந்தித்து குறி கேட்டுள்ளார் தாண்டவன். சாமி எனக்குஒரு வாரிசாவது வேண்டும் என்று தாண்டவன் கேட்க, அந்த சாமியாரோ, உன் மனைவிக்கு 5பேய்கள் பிடிச்சிருக்கு, இதனால் ஆண் வாரிசு பிறக்காது, ஆண் வாரிசு வேண்டுமென்றால்இன்னொரு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இந்தச் சம்பவம் நடந்து பல ஆண்டுகள் ஆன பிறகு தாண்டவன் உடையார் மனைவிக்கு இரு பெண்குழந்தைகள் பிறந்தன. ஆனால், ஆண் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை.

இந் நிலையில் ஆண்டுகள் உருண்டோட பெண் குழந்தைகள் பெரிதாகிவிட கடந்த ஆண்டு மூத்த மகள்பெரியக்காவுக்கு சின்னதுரை என்பவரைத் திருமணம் செய்து வைத்தார்.

மருமகன் சின்னதுரையின் குடும்பம் வறுமையில் வாடி வருகிறது. இந் நிலையில் மருமகனின்தங்கையான 18 வயது பாப்பாத்தியை தாண்டவன் பெரிசுக்குப் பிடித்துப் போய்விட்டது.

பாப்பாத்திக்குத் திருமணம் செய்து வைக்கும் அளவுக்கு தனது மருமகனின் குடும்பத்தினருக்குபொருளாதார பலம் இல்லை என்பதைத் தெரிந்து கொண்ட தாண்டவன், அந்த இளம் பெண்ணைதனக்கே கட்டி வைக்குமாறு கூறியிருக்கிறார்.

இதனால் இருவரது வீட்டிலும் அதிர்ச்சி. ஆனால், பல ஆண்டுகளுக்கு முன் சாமியார் சொன்ன ஆண்வாரிசு கதையைச் சொல்லி அவர்களை வளைத்துவிட்டார் பெரிசு.

முதலில் தாண்டவனை மணம் செய்ய மறுத்தார் பாப்பாத்தி. ஆனால், அவர்களை வளைத்து சம்மதிக்கவைத்துவிட்டார் தாண்டவன் உடையார்.

கடந்த 6 நாட்களுக்கு முன் விராலிமலை முருகன் கோவில் அடிவாரத்தில் தாண்டவன்உடையார்-பாப்பாத்தி திருமணம் நடந்தது.

தனக்கு ஆண் வாரிசு வேண்டும் என் சொல்லி தாண்டவன் உடையார், ஒரு இளம் பெண்ணைத்திருமணம் செய்திருப்பது அப் பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந் நிலையில் தனது முதல் மனைவியை தாண்டவன் உடையார் விரட்டி விட்டுவிட்டதாகவும் சிலர்கூறுகின்றனர். ஆனால், அதை தாண்டவன் உடையார் மறுக்கிறார்.

--> Mail this to a friend  Post your feedback  Print this page 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+