இலங்கை: தமிழர்கள் கொலையில் 2 இன்ஸ்பெக்டர்களுக்கு தூக்கு தண்டனை
கொழும்பு:
27 அப்பாவித் தமிழ் இளைஞர்களின் படுகொலைக்குக் காரணமாக இருந்த 2 காவல்துறை அதிகாரிகளுக்கு இலங்கை உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
கடந்த 2000ம் ஆண்டு அக்டோபர் மாதம் போலீசாரால் பல தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். புலிகள் என்ற சந்தேகத்தின்பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக போலீசார் கூறினர்.
அவர்களை பண்டாரவாலா என்ற இடத்தில் முகாமில் அடைத்து வைத்தது போலீஸ். அப்போது திடீரென அந்த முகாமின் மீது சிங்கள வெறியர்கள் தாக்குதல் நடத்தினர். ஆயுதம் இன்றி கட்டிப் போடப்பட்டிருந்த அந்த அப்பாவித் தமிழர்களை போலீஸ் துணையுடன் இன வெறியர்கள் அடித்தும், எரித்தும் கொலை செய்தனர்.
அச் சம்பவத்தில் 27 தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டனர். கொலைக் கும்பலைத் தடுக்க போலீஸ் முன் வரவில்லை. அவர்களை போலீசார் தூண்டிவிட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதில் இந்தக் கொலைகளுக்கும் காவல்துறை அதிகாரிகளுக்குக்கும் தொடர்பு இருந்தது உறுதியானது. இதையடுத்து 18 போலீஸ் அதிகாரிகள் மீது இலங்கை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
3 நீதிபதிகள் கொண்ட உயர் மட்ட பெஞ்ச் விசாரணையை நடத்தியது. அதில் 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்களுககு இக் கொலையில் தொடப்பு இருப்பது உறுதியானதையடுத்து அவர்களுக்கு நீதிபதிகள் தூக்கு தண்டனை விதித்தனர்.
போலீஸ் துணையுடன் கொலையைச் செய்த மேலும் 3 இன வெறியர்களுக்கும் தூக்கு தண்டனை விதித்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.












Click it and Unblock the Notifications