அழகிரி காவல் ஜூலை 16 வரை நீட்டிப்பு
Subscribe to Oneindia Tamil
மதுரை:
தா.கிருட்டிணன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மு.க.அழகிரியின் சிறைக் காவல் ஜூலை 16ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆனால் நேற்று அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக போலீஸார் பாதுகாப்புப் பணியில் மும்ரமாகஇருந்ததால் அழகிரி மதுரை நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்படவில்லை.
அதற்குப் பதிலாக திருச்சி சிறை நிர்வாகம் சார்பில் நீதிபதி வனிதா முன்பு ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில் காவலை நீட்டிக்கக் கோரி கோரப்பட்டிருந்தது. அதை ஏற்று நீதிபதி வனிதா அழகிரியின் காவலை ஜூலை16ம் தேதி வரை நீட்டித்தார்.
புது அரசு வக்கீல் நியமனம்: இதற்கிடையே, தா.கி. கொலை வழக்கில் அரசுத் தரப்பில் வாதாட ஓய்வு பெற்றமாவட்ட, செஷன்ஸ் நீதிபதி எம்.எஸ்.கந்தசாமியை அரசு அறிவித்துள்ளது.
இனிமேல் இவர்தான் தா.கி. கொலை வழக்கில் அரசு சார்பில் வாதாடுவார்.












Click it and Unblock the Notifications