அழகிரிக்கு எதிராக வாதாட புதிய அரசு வக்கீல் நியமனம்: பிரேமானந்தா வழக்கில் ஆஜரானவர்
திருச்சி:
தா.கிருட்டிணன் கொலை வழக்கில் கைதாகியுள்ள அழகிரிக்கு எதிராக வாதாட அரசுத் தரப்பில் வழக்கறிஞர்கந்தசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பிரேமானந்தா வழக்கிலும், ராகிங்கால் கொலை செய்யப்பட்ட மாணவன்நாவரசு வழக்கிலும் அரசின் சார்பில் ஆஜரானவராவார்.
இந் நிலையில் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அழகிரியிடம் திருட்டு வீடியோ தடுப்பு போலீஸார்விசாரணை நடத்தியுள்ளனர்.
மதுரை, மத்திய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள அழகிரிக்குச் சொந்தமான ராயல் வீடியோ கடையில் உரிமம்பெறாத திருட்டு விசிடிக்களை போலீசார் கைப்பற்றினர். இந்த வழக்கில் அழகிரியிடம் விசாரிக்க நீதிமன்றம்போலீசாருக்கு அனுமதி தந்தது.
இதையடுத்து திருச்சி சிறையில் வைத்து ஜெயிலர் மற்றும் வழக்கறிஞர் முன்னிலையில் அழகிரியிடம் போலீசார்விசாரணை நடத்தினர். மதுரை திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்துல் ரஹீம், திருச்சிதிருட்டு வீடியோ தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீஸார் இந்த விசாரணையைநடத்தினர்.
ஸ்டிரைக் எதிரொலி: அழகிரி ஆஜர் இல்லை
இதற்கிடையே, தா. கிருட்டிணன் கொலை வழக்கில் கைதான அழகிரியின் காவல் நேற்றுடன் முடிந்தது.இதையடுத்து அவர் மதுரை 6வது குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காவல் நீட்டிப்புசெய்யப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் அரசு ஊழியர் போராட்டத்தில் நீதிமன்ற ஊழியர்கள் முழு அளவில் பங்கேற்றதாலும், பெரும்பாலானபோலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாலும் அழகிரியை நீதிமன்றத்துக்குக் கொண்டு வர முடியாதநிலை இருப்பதாகக் கூறி அவரது காவலை நீடிக்க வேண்டும் என போலீஸார் மனு செய்தனர்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி வனிதா, அழகிரி ஆஜர்படுத்தப்படாமலேயே அவரது காவலை ஜூலை 16ம் தேதிவரை நீட்டித்து உத்தரவிட்டார்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு












Click it and Unblock the Notifications