தலித் உரிமையை பெற்றுத் தருவாரா சங்கராச்சாரியார்?: கிருஷ்ணசாமி கேள்வி
காரைக்குடி:
தலித் மக்களின் உரிமையை பெற்று தர சங்கராச்சாரியார் கண்டதேவி தோரோட்டத்துக்கு வருகை தர வேண்டும்என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்துள்ளர்.
இந் நிலையில் காரைக்குடியில் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:
கண்டதேவி தோரோட்டத்தின் போது அனைத்து தரப்பு மக்களும் தேர்வடம் பிடித்து இழுக்க அனுமதிக்கப்படவேண்டும். உயர்நீதிமன்ற தீர்ப்பு, இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் தீர்ப்பு ஆகியவற்றை அமல்படுத்தவேண்டும். இதுவரை இத் தீர்ப்புகளை மதிக்காத இன்னொகு ஜாதியினர் தலித் மக்களை அவமதித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு அந்த ஜாதியினரை மட்டும்ே காலை 10 மணிக்கே அழைத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீஸ்,தலித் பிரிவினரை திட்டமிட்டு ஒதுக்கிவிட்டு, தேரோட்டத்தை நடத்தினர். இந்த ஆண்டு அதுபோல சட்டமீறல்நடக்க கூடாது.
இது மனித உரிமை மீறல் மட்டுமல்ல. அரசியல் சட்டத்தை அவமதிக்கும் செயலும் ஆகும். கண்டதேவிதேரோட்டத்திற்கு வெளி ஆட்கள் வரக்கூடாது என்று அறிவித்த மாவட்ட நிர்வாகம் கடந்த முறை குறிப்பிட்டபிரிவைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை மட்டும் எப்படி அனுமதித்து?
அனுமதித்தால் இரு பிரிவைச் சேர்ந்த பிரமுகர்களையும் எம்.எல்.ஏ.க்களையும் அனுமதிக்க வேண்டும்.
இந்தியா என்பது ஒரே நாடுதான. இதற்குள்ளேயே அரசியல் சட்டத்திற்கு எதிரான சமூக அமைப்பைவைத்திருப்பவர்களோடு மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்துவதே தவறானதாகும்.
சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதாக கூறிக்கொண்டு போலீஸாரே வெள்ளை உடைகளையும், காக்கி உடைகளையும்அணிந்து கொண்டு தலித்களை புறக்கணித்து கடந்த ஆண்டு தோரோட்டத்தை நடத்தினர்.
இந்த ஆண்டும் எங்களுக்கு தொடர்ந்து அநீதி விளைவித்தால் கடும் விளைவுகள் ஏற்படும். மக்களின் வரிப்பணத்தை சம்பளமாக பெறும் அதிகாரிகள் ஒருதலைப்பட்சமாக நடக்க கூடாது.
இந்து- முஸ்லீம் சமாதானத்தைப் பற்றியும் மத மாற்றத் தடை சட்டம் பற்றியும் பேசும் சங்கராச்சாரியார், இந்துமதத்திற்குள்ளேயே உள்ள சமூக அநீதிகளைக் களைய முயற்சி எடுக்க வேண்டியது தானே?
இந்து மதத்தின மீது உண்மையான விசுவாசம் அவருக்கு இருந்தால் இந்த முறை கண்டதேவிக்கு வந்து தலித்மக்களின் உரிமையினை பெற்றுத் தந்து தேர் வடம் பிடிக்கச் செய்ய வேண்டும் என்றார் கிருஷ்ணசாமி.












Click it and Unblock the Notifications