மணப்பெண் ஓடியதால் திருமணம் ரத்து: மேடை ஏறியது புதிய ஜோடி

Subscribe to Oneindia Tamil

திருப்போரூர்:

தாலி கட்டும் நேரத்தில் மணமகள் திடீரென மாயமானதால் திருமணம் ரத்தானது. இதையடுத்து கல்யாணஏற்பாடுகளுக்கு செய்யப்பட்ட செலவும், சாப்பாடும் வீணாவதைத் தடுக்க அதே மேடையில் வேறொரு ஜோடிக்குதிடீர் திருமணம் செய்து வைக்கப்பட்டது.

காஞ்சீபுரம் மாவட்டம் செம்பாக்கம் அருகே உள்ள காமராஜபுரத்தை சேர்ந்த எட்டி என்பவரின் மகள் ஷீலாஷெரோன் (வயது 24). இவருக்கும் டேவிட் நல்லதம்பி என்பவரின் மகன் ஆனந்த ராஜுக்கும் திருமணம்நிச்சயிக்கப்பட்டது.

ஷீலா வேறொரு மதத்தைச் சேர்ந்த வாலிபரைக் காதலித்து வந்தார். ஆனால், அதை ஏற்க மறுத்த வீட்டினர் இந்தத்திருமணத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

கடந்த 2ம் தேதி மாலை அந்திரேயாபுரம் சி.எஸ்.ஐ. ஆலயத்தில் திருமணம் நடக்க இருந்தது. இந்நிலையில்திருமணத்துக்கு சிறிது நேரத்துக்கு முன் ஷீலாவைக் காணவில்லை. அவர் வீட்டை விட்டு ஓடியிருந்தார்.

அவரைத் தேடி நாலாபக்கமும் ஆட்கள் பறந்தனர். அப்போது தான் விரும்பிய வாலிபரையே ஷீலா ரிஜிஸ்டர்ஆபிசில் வைத்து திருமணம் செய்து கொண்ட செய்தி கிடைத்தது.

இதையடுத்து திருமணம் நிறுத்தப்ட்டது. ஆனால், நூற்றுக்கணக்கான உறவினர்களும் சர்ச்சில் கூடியிருந்தனர். சுமார்ஆயிரம் பேருக்கு விருந்து சாப்பாடும் தயாராகி இருந்தது.

இதைத் தொடர்ந்து இந்த உணவு வீணாவதைத் தடுக்கவும், வந்துவிட்ட உறவினர்களை மகிழ்ச்சியோடு திருப்பிஅனுப்பி வைக்கவும் மாப்பிள்ளை ஆனந்த ராஜ் முடிவு செய்தார்.

இதனால், ஏற்கனவே நிச்சயதார்த்தம் செய்யப்பட்டிருந்த அவரது தம்பிக்கு திருமணம் செய்து வைக்கத்திட்டமிட்டார். தம்பிக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணும் இந்தத் திருமணத்துக்கு வந்திருந்தார். இதையடுத்துஇருவரையும் அழைத்துப் பேசினார்.

இருவரும் உடனே திருமணம் செய்து கொள்ள ஒப்புக் கொண்டனர். பின்னர் இரு வீட்டாரிடமும் மாப்பிள்ளையேஅவரச பேச்சு நடத்தி தனக்காக அமைக்கப்பட்ட மேடையில் தம்பிக்குத் திருமணம் செய்து வைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+