முல்லைவேந்தனை பார்க்க சென்ற திமுகவினர் மீது தடியடி: பலர் மண்டை உடைந்தது
சென்னை:
சேலம் மத்திய சிறையில் ரெளடி வெல்டிங் குமாரால் கழுத்து அறுக்கப்பட்டு அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தனைச் சந்தித்து நலம் விசாரிக்கச் சென்ற திமுகவினருக்குஅனுமதி மறுக்கப்பட்டது.
இதை எதிர்த்துப் போராட்டம் நடத்திய திமுகவினர் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில் பலருக்கு மண்டைஉடைந்தது.
நேற்று சேலம் சிறையில் முல்லைவேந்தனையும் மேலும் சிலரையும் வெல்டிங் குமார் மற்றும் அவனது கும்பலைச்சேர்ந்தவர்கள் தாக்கினர். முல்லைவேந்தனின் கழுத்தையும் அறுத்தனர். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த அவரைசேலம் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த முல்லைவேந்தனைச் சந்திக்க சேலம் மாவட்ட திமுக துணைச் செயலாளர் சிவலிங்கம்உள்ளிட்ட திமுகவினர் ஏராளமானோர் மருத்துவமனையில் திரண்டனர்.
ஆனால், அவர்களுக்கு சந்திக்க அனுமதி தரப்படவில்லை. திமுகவினரைக் கலைந்து போகச் சொல்லிய போலீசார்திடீரென முல்லைவேந்தனை பெட்டில் இருந்து தூக்கிக் கொண்டு பின்பக்க வாசல் வழியாக போலீஸ் வேனுக்குக்கொண்டு சென்றனர்.
மீண்டும் மத்திய சிறைக்கே அவரை போலீஸார் கொண்டு சென்றனர். இதையறிந்த திமுகவினர் மருத்துவமனையின்பின் வாசலில் கூடி மறியல் செய்தனர். இதையடுத்து அவர்கள் மீது போலீஸார் பயங்கர தடியடி நடத்திவிரட்டியடித்தனர். இதில் சிவலிங்கம் மயக்கமடைந்து விழுந்தார்.
மேலும் பல திமுகவினருக்கும் மண்டை உடைந்தது.
ஸ்டாலினுக்கு அனுமதி மறுப்பு:
முன்னதாக முல்லைவேந்தனைச் சந்திக்க மருத்துவனைக்கு வந்த முன்னாள் திமுக அமைச்சர் வீரபாண்டிஆறுமுகத்துக்கும் அனுமதி தரப்படவில்லை.
இச் சம்பவத்தைத் தொடர்ந்து முல்லைவேந்தனைச் சந்திக்க திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின் சேலம்சிறைக்கு வந்தார். ஆனால், முல்லைவேந்தனைச் சந்திக்க அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால்அவர்களுடன் நீண்ட நேரம் ஸ்டாலின் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். அதன் பிறகு அவர் திரும்பிச் சென்றார்.
கொல்ல சதி: கருணாநிதி புகார்
சிறையில் அடைக்கப்பட்டுள்ள முல்லைவேந்தனைக் கொல்ல சதி நடப்பதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.
முல்லைவேந்தன் மீதான தாக்குதல் குறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுகஆட்சியில், சிறைக்கு உள்ளேயும் திமுகவினருக்கு பாதுகாப்பில்லை என்பதையே இந்த சம்பவம் காட்டுகிறது.முல்லைவேந்தனைக் கொலை செய்யவே இந்த செயல் நடந்துள்ளதாக கருதுகிறேன். இந்த செயல் கடுமையாககண்டிக்கத்கக்து என்று கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள இன்னொரு அறிக்கையில், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தமுல்லை வேந்தனைப் பார்க்கச் சென்ர திமுகவினர் மீது போலீஸார் அராஜகமாக தடியடி நடத்தியுள்ளனர்.
பொய்யான வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முல்லைவேந்தனுக்கு சிறைக்குள் பாதுகாப்பான சூழ்நிலைஇல்லை. சிறை அதிகாரியான பரமேஸ்வரன் என்பவர், முல்லை வேந்தனை தரக் குறைவாகவும், அநாகரீகமாகவும்அர்ச்சித்துப் பேசியுள்ளார் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
மகள், மகனுக்கு அனுமதி மறுப்பு:
இதற்கிடையே, காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முல்லைவேந்தனைப் பார்ப்பதற்குநேற்று மாலை அவரது மகள், மகனுக்கு போலீஸார் அனுமதி மறுத்து விட்டனர். நீண்ட நேரமாக அவர்கள் அரசுமருத்துவமனையில் காத்திருந்தும் கூட பார்ப்பதற்கு அனுமதி கிடைக்கவில்லை.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications