ரூ. 2 லட்சம் பணம் கேட்டு குழந்தையைக் கடத்தல்: கும்பல் கைது

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரையில் ரூ. 2 லட்சம் கேட்டு சிறுவனைக் கடத்தியவர்களை போலீஸார் கைது செய்தனர்.

மதுரை ஆத்திகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினா மில்டன். இவர் ஆசிரியையாக உள்ளார். இவரது மகன் டேவிட்ஸ்டீபனை ஒரு கும்பல் கடத்திச் சென்று விட்டது.

நேற்றிரவு ரத்தினாவின் வீட்டுக்கு போன் செய்த இக்கும்பல் ரூ. 2 லட்சம் பணம் கொடுத்தால் சிறுவனைவிடுவதாகவும், பணத்துடன் இரவு 10.45 மணிக்கு குறிப்பிட்ட இடத்திற்கு வர வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இதையடுத்து போலீஸுக்குப் புகார் கொடுக்கப்பட்டது. போலீஸார் மாறுவேடத்தில் அந்த இடத்திற்கு விரைந்தனர்.அங்கு அக்கும்பலைச் சேர்ந்தவர்கள் வேனில் வந்தனர். அவர்களை மடக்கிப் பிடித்த போலீஸார் அக் கும்பலிடம்இருந்த சிறுவனை பத்திரமாக மீட்டு அவர்களைக் கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+