இலங்கை அமைச்சர் வீட்டின் மீது துப்பாக்கி தாக்குதல்
கொழும்பு:
இலங்கை வர்த்தகத்துறை அமைச்சரின் வீட்டில் இன்று ஒருவன் துப்பாக்கித் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பினான்.இதில் அமைச்சரின் பாதுகாவலர் படுகாயமடைந்தார். இது அரசியல் மோதலால் நடந்துள்ள தாக்குதல் என்றுதெரிகிறது.
வர்த்தக அமைச்சர் ரவி கருணநாயகே இப்போது லண்டணில் உள்ளார். இந் நிலையில் கொழும்பில் மிக பலத்தபாதுகாப்பு போடப்பட்டுள்ள இலங்கை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது வீட்டின் மீது இன்று அதிகாலைஇத் தாக்குதல் நடந்தது.
இரு வாகனங்களில் இருவர் இத் தாக்குதலை நடத்தி காவலரை காயப்படுத்திவிட்டு அவரிடம் இருந்த துப்பாக்கிமற்றும் குண்டுகளைப் பறித்துக் கொண்டு தப்பிவிட்டனர்.
தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார், இது அரசியல் மோதலால் நடந்த தாக்குதலாகவேநினைக்கிறோம். தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து அடையாளம் தெரிந்துள்ளது. விரைவில் அவர்கள்கைதாவார்கள் என்றார்.
24 மணி நேரமும் மிக பலத்த பாதுகாப்புடன் இருக்கும் நாடாளுமன்றப் பகுதியில் நடந்துள்ள இத் தாக்குதல்அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications