மாமனார் இறுதிச் சடங்கு: நக்கீரன் கோபால் பங்கேற்பு
Subscribe to Oneindia Tamil
விருத்தாச்சலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் நடந்த மாமனான் இறுதிச் சடங்கில் நக்கீரன் ஆசிரியர் கோபால் கலந்துகொண்டார்.
நக்கீரன் ஆசிரியர் கோபாலின் மாமனார் ஆர்.எஸ்.பாண்டியன், விருத்தாச்சலத்தில் உள்ள தனது வீட்டில் நேற்றுமுன்தினம் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள பூந்தமல்லி பொடா நீதிமன்றம் கோபாலுக்கு அனுமதி வழங்கியது.
இதையடுத்து நேற்று நடந்த இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் கோபால் கலந்து கொண்டார். ஆயுதப் போலீஸ்பாதுகாப்புடன் சென்னையிலிருந்து கொண்டு வரப்பட்ட அவர் உறவினர்கள் தவிர வேறு யாருடனும் பேசஅனுமதிக்கப்படவில்லை.
இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட பின்னர் பலத்த பாதுகாப்புடன் மீண்டும் சென்னை மத்திய சிறைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.












Click it and Unblock the Notifications