காணாமல்போன இன்ஸ்பெக்டர் கொல்லப்படடாரா?

Subscribe to Oneindia Tamil

ஈரோடு:

ஈரோடு கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த ஜோதி கிருஷ்ணன் குறித்துஇதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை, அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என அவரது குடும்பத்தினர் அச்சம்தெரிவித்துள்ளனர்.

நகராட்சித் துணைத் தலைவராக இருந்த அதிமுகவைச் சேர்ந்த சிட்டு என்ற பாலகிருஷ்ணனின் கொலை வழக்கைவிசாரித்து வந்த இன்ஸ்பெக்டர் ஜோதி கிருஷ்ணன் திடீரென காணாமல் போனார்.

கொலையாளிகளால் அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால், அவர் சொந்த பிரச்சினைகள்காரணமாக மாயமானதாகவும்; விரைவில் திரும்பி விடுவார் எனவும் மாவட்ட எஸ்.பி. கூறியிருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வெலிங்டனில் அடையாளம் தெரியாதபிணம் கண்டெடுக்கப்பட்டது. இறந்து கிடந்தவர் இன்ஸ்பெக்டர் ஜோதி கிருஷ்ணனாக இருக்கலாம் என தகவல்கள்வெளியாயின.

இதையடுத்து நேற்று அவரது சகோதரரும் முன்னாள் திமுக எம்.பியுமான கே.பி. ராமலிங்கம், மற்றும் அவரதுசகோதரர் பாலசுப்ரமணியம் ஆகியோர் குன்னூர் சென்றனர். இறந்து கிடந்தது தங்களது சகோதரர் ஜோதிகிருஷ்ணனாக இருக்கலாம் என அவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

ஆனால், உடல் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்து கிடப்பதாகவும், அது இன்ஸ்பெக்டர் ஜோதிகிருஷ்ணனின் உடல் அல்ல என்றும் ஈரோடு மாவட்ட போலீஸார் கூறுகின்றனர்.

ஆனால், ஜோதி கிருஷ்ணனுக்கு காலில் இருந்த தழும்பு இந்த உடலிலும் காணப்படுகிறது. இதனால் அது ஜோதிகிருஷ்ணன் தான் என அவரது சகோதரர்கள் கூறுகின்றனர்.

நீலகிரி தடயவியல் பிரிவு போலீசார் பரிசோதனைக்காக உடலை எடுத்துச் சென்றுள்ளனர். இந்த சோதனைமுடிவில் தான் இது ஜோதி கிருஷ்ணனின் உடலா என்பது குறித்துத் தெரியவரும்.

எஸ்.பி. தலைமையில் தனிப்படை:

இதற்கிடையே, இன்ஸ்பெக்டர் ஜோதி கிருஷ்ணன் கொல்லப்படவில்லை என்று கூறி வரும் காவல் துறை, அவரைத்தேட ஈரோடு மாவட்ட எஸ்.பி. தலைமையில் தனிப்படை அமைத்துள்ளது.

எஸ்.பி. பாலசுப்ரமணியம் தலைமையில் 4 இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கொண்ட இந்தப் படை தமிழகம்முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபடவுள்ளது. மேலும் கேரளா, கர்நாடகம் போன்ற மாநிலங்களுக்கும் தனிப்படை போலீசார் அனுப்பப்படுவர் என்று காவல்துறை அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+