அதிமுக எம்.எல்.ஏ. மகனின் மான் வேட்டை!!
கன்னியாகுமரி:
கண்னியாகுமரி- கேரள எல்லையில் உள்ள மலைப் பகுதியில் சம்பார் ரக மான்களை வேட்டையாடி சமைத்துத்திண்ற 4 பேர் மீது வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில் ஒருவர் அதிமுக எம்.எல்.ஏ. குமாரதாசின்மகனாவார்.
இக் கும்பல் இன்னும் கைது செய்யப்படவில்லை.
கிள்ளியூர் தொகுதியில் இருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்கெடுக்கப்பட்ட டாக்டர் குமாரதாஸ் பின்னர் 4எம்.எல்.ஏக்களுடன் அதிமுகவில் இணைந்தனர். இப்போது கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய அதிமுகபுள்ளியாக அவர் திகழ்கிறார்.
இவரது மகன் தேவ், நண்பர்கள் ஜஸ்டின், காட்சன் மற்றும் இன்னொருவன் ஆகியோர் ஜீப்பில் கீழ் கொடையார்ரேஞ்ச் மலைப் பகுதியில் உள்ள வீரபுலி ரிசர்வ் காட்டில் துப்பாக்கிகளால் சுட்டு மான்களை வேட்டையாடி வந்தனர்.அதை அங்கேயே வைத்து சமைத்தும் சாப்பிட்டனர்.
சமீபத்தில் இவர்களை வனத்துறை அதிகாரி அன்வர்தீன் தலைமையிலான படையினர் காட்டுப் பகுதியில்மடக்கினர். ஆனால், அவர்கள் நால்வரும் தப்பியோடிவிட்டனர். அவர்கள் பயன்படுத்திய ஜீப்பை கைப்பற்றியவனத்துறையினர் இந்த நான்கு பேர் மீதும் இந்திய வன விலங்குகள் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ்வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
ஜீப்பை நாகர்கோவில் குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் சசிரேகாவிடம் வனத்துறையினர் ஒப்படைத்தனர்.
தப்பியோடிய எம்.எல்.ஏவின் மகன் உள்ளிட்ட 4 பேரும் இன்னும் கைது செய்யப்படவில்லை. குற்றம்நிரூபிக்கப்பட்டால் இவர்களுக்கு ஓராண்டு வரை தண்டனை கிடைக்கும்.












Click it and Unblock the Notifications