தமிழகத்தில் கன மழை: சென்னையில் கல் குவாரியில் 2 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்& சென்னை:

தமிழகத்தின் பல பகுதிகளிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக காவிரி டெல்டா பகுதிகளில்நேற்று முதல் நல்ல மழை பெய்து வருகிறது. சென்னை புறநகர்ப் பகுதியில் பெய்த கன மழை காரணமாக, கல்குவாரியில் பாறைகள் சரிந்து 2 தொழிலாளர்கள் பலியாயினர்.

தென் மேற்கு பருவ மழை தமிழகத்தில் அவ்வப்போது பெய்து வருகிறது. தற்போது வங்கக் கடலில் குறைந்தகாற்றழுத்த மண்டலம் உருவாகியிருப்பதால் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள், காவிரி டெல்டா ஆகியபகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.

சென்னை புறநகர்ப் பகுதியில் நேற்றிரவு பெய்த கன மழை காரணமாக, கல் குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்துநசுக்கியதில் 2 தொழிலாளர்கள் உடல் சிதறி பலியாயினர்.

தாம்பரம் அருகே உள்ளது திருநீர் மலையில் ஏராளமான கல் குவாரிகள் உள்ளன. இதில் ஒரு கல் குவாரியில் மழைநீர் தேங்கியதில் பாறைகள் சரிந்து விழ ஆரம்பித்தன. இதில் சிக்கிக் கொண்ட 2 தொழிலாளர்கள் உடல் நசுங்கிஇறந்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே சென்னையில் இன்னும் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி நிலையம்கூறியுள்ளது. இன்று காலை முதல் மேகமூட்டமாகவே உள்ளது. இருப்பினும் மழை பெய்யவில்லை. இரவில் மழைபெய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-காவிரி டெல்டாவில்...

காவிரி டெலடா பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது.

குறிப்பாக தஞ்சையில் நல்ல மழை பெய்தது. இதனால் காவிரி டெல்டாப் பகுதி விவசாயிகள்மகிழ்ச்சியடைந்துள்ளனர். மழை மேலும் சில நாட்களுக்கு நீடித்தால் தான் விவசாயத்துக்கு பயன்படும் எனவிவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+