கருணாநிதியுடன் வெங்கையா நாயுடு சந்திப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுக தலைவர் கருணாநிதியை, பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் வெங்கையா நாயுடு இன்று சந்தித்துப் பேசினார்.

சென்னையில் ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் பங்கேற்க வந்துள்ள வெங்கையா நாயுடு இன்று காலை அண்ணாஅறிவாலயம் சென்ற கருணாநிதியை சந்தித்துப் பேசினார். அப்போது அகில இந்திய பா.ஜ.க. செயலாளர்இல.கணேசனும் உடன் இருந்தார்.

சமீப காலமாக திமுக-பா.ஜ.க. இடையே உரசல் அதிகரித்து வரும் நிலையில் வெங்கையா நாயுடு திடீரெனகருணாநிதியை சந்தித்துப் பேசியுள்ளார்.

ஆனால், சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய நாயுடு, மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் உடல் நலம்குறித்துப் பேசவே வந்தேன். அவரது உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வரும் செய்திகளை கருணாநிதிமறுத்தார். உடல் நிலை தேறி வருவதாகவும், பத்திரிக்கைகள் தவறான செய்திகளை வெளியிடுவதாகவும் வருத்தம்தெரிவிததார் என்றார்.

முன்னதாக பா.ஜ.க. தலைமையகமான கமலாலயத்தில் நிருபர்களிடம் பேசிய நாயுடு, வெளிநாட்டவரானசோனியாவை பிரதமராக காங்கிரஸ் முன் வைத்து பிரச்சாரம் செய்தால் அதை எதிர்த்தே நாங்கள் முக்கிய பிரச்சாரம்செய்வோம். முன்பு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வளர்ச்சித் திட்டங்கள், சாதனைகளைச் சொல்லி ஓட்டு கேட்டதிட்டமிட்டிருந்தோம்.

இப்போது சோனியாவை காங்கிரஸ் முன் நிறுத்தினால் அதையே பிரச்சனையாக்கத் திட்டமிட்டுள்ளோம்.எங்களைப் போலவே கூட்டணி ஆட்சி நடத்த காங்கிரஸ் திட்டமிடுகிறது. பா.ஜ.கவை காங்கிரஸ் காப்பி அடிக்கிறது.

எங்கள் கூட்டணியில் இருந்து யாரும் விலகிச் செல்வதை நாங்கள் விரும்பவில்லை. அடுத்த மக்களவைத்தேர்தலில் திமுகவுடன் கூட்டணி தொடர வேண்டும் என்றே விரும்புகிறோம்.

சென்னையில் நடந்த ஆர்.எஸ்.எஸ். மாநாட்டில் அயோத்தி குறித்து பேசப்பட்டதாகக் கூறுவது தவறு. அங்குஅயோத்தி உள்பட எந்த விஷயம் குறித்தும் பேசப்படவில்லை. சொந்த விவகாரங்களே பேசப்பட்டன என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+