வேலூரை அதிர வைத்த கல்யாண சோகங்கள்!

Subscribe to Oneindia Tamil

வேலூர்:

திருமணத்திற்கு முதல் நாள் மணப்பெண் இறந்ததால், வேறு ஒரு பெண்ணுக்கு தாலி கட்டினார் புதுமாப்பிள்ளை.

அதேபோல, மற்றொரு சம்பவத்தில் மணமகன் தற்கொலை செய்து கொண்டதால் கல்யாணம் திடீரென நின்றுபோனது.

வேலூர் சத்துவாச்சேரி பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி என்பவருக்கும், பிரமிளா என்பவருக்கும் கல்யாணம்நிச்சயிக்கப்பட்டிருந்தது. திருமணத்திற்கு முதல் நாள் மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டாருக்காக காத்திருந்தனர்.

ஆனால் இடியான செய்திதான் அங்கு வந்து சேர்ந்தது. மணமகள் திடீரென்று இறந்து விட்டதாக பெண் வீட்டார்சேதி கூறினர். திருமணத்தில் இஷ்டமில்லால் அப் பெண் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது.

அதிர்ந்து போன மாப்பிள்ளை வீட்டார் கூடிப்பேசி, திட்டமிட்டபடி கல்யாணத்தை நடத்துவது என்றும், ஏற்கனவேபார்த்து விட்டு நிராகரித்த ஜெயந்தி என்ற பெண்ணின் வீட்டாரை அணுகி ஒப்புதல் பெற்றனர்.

பின்னர் திட்டமிட்டபடி அடுத்த நாள் காலை முகூர்த்தத்தில் ஜெயந்திக்கும், பாலசுப்ரமணிக்கும் திருமணம் நடந்தது.

இந் நிலையில் இதேபோன்ற இன்னொரு சம்பவம் வேலூர் மாவட்டத்திலேயே நடந்துள்ளது.வாலாஜாபேட்டையைச் சேர்ந்த மணிவண்ணன் என்பவருக்கும், ராஜேஸ்வரி என்ற பெண்ணுக்கும் திருமணம்நிச்சயமாகியிருந்தது.

வியாழக்கிழமை காலை திருமணம் நடக்கவிருந்தது. அதிகாலை 4 மணியளவில் மாப்பிள்ளையை எழுப்பச்சென்றவர்கள் அதிர்ந்து போனார்கள்.

தனது அறையில் மின்விசிறியில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார் மாப்பிள்ளை. இதையடுத்து கல்யாணமண்டபமே சோகமயமானது.

மண்ணெண்ணை வியாபாரம் செய்து வந்தவர் மணிவண்ணன். அதில் ஏகப்பட்ட கடன்களை வாங்கி வைத்துள்ளார்.கடன்கொடுத்தவர்களால் நெருக்கப்பட்டு வந்தார். இந் நிலையில் திருமணம் நெருங்க நெருங்க கடன் தொல்லைபயம் அதிகமாகி, தற்கொலை முடிவை எடுத்து விட்டதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+