ஜெ. சொந்த வாழ்க்கை குறித்த எழுத நக்கீரனுக்கு 2 வார கால தடை
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோர் குறித்து நக்கீரன் வார இதழில் கட்டுரைவெளியிடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதாவும் சசிகலாவும் தாக்கல் செய்த மனுவில், நக்கீரன் வார இதழில்எங்களைப் பற்றிய தவறான, அவதூறான செய்திகள், கட்டுரைகள், கேலிச்சித்திரங்கள் தொடர்ந்துவெளியிடப்பட்டு வருகின்றன.
எங்களது தனிப்பட்ட குண நலன்களை மாசுபடுத்தும் வகையில் நக்கீரன் இதழில் செய்திகள் வெளியாகிவருகின்றன. நாங்கள் இருவரும் சேரிந்து மதுபான நிறுவனம் நடத்துகிறோம், பீர் தயாரிக்கும் தொழிற்சாலைநடத்துகிறோம் என்றெல்லாம் செய்திகள்வருகின்றன.
உண்மைக்குப் புறம்பான இந்த செய்திகளை வெளியிடுவதை தடை செய்ய வேண்டும். எங்களைப் பற்றியதனிப்பட்ட செய்திகளை வெளியிடுவதற்கு முன் எங்களிடம் அதற்கு விளக்கம் கேட்டுவிட்டு வெளியிட உத்தரவிடவேண்டும்.
கைக்குக் கிடைத்ததை எல்லாம் எழுதுவது பத்திக்கை சுதந்திரம் அல்ல. இந்தச் செய்திகள், கட்டுரைகளால் எங்களதுபெயருக்கு ஏற்பட்டுள்ள களங்கம் மற்றும் அவதூறுக்காக நக்கீரன்
பத்திரிக்கை ஆசிரியர் கோபாலும், இணை ஆசியர் காமராஜும் ரூ. 2 கோடி நஷ்டஈடு வழங்க உத்தரவிடவேண்டும்.
இவ்வாறு ஜெயலலிதாவும் சசிகலாவும் கூறியுள்ளனர்.
மனுவை விசாரித்த நீதிபதி பிரபா ஸ்ரீதேவன், பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளவர்களை விமர்சனம் செய்வதில்தவறில்லை. ஆனால் அவர்களது சொந்த வாழ்க்கை பற்றிய செய்திகளை வெளியிடும் முன் அவர்களிடம் விளக்கம்கேட்ட பின்னரே வெளியிட வேண்டும்.
நக்கீரன் வார இதழில் ஜெயலலிதா குறித்து வெளியாகும் செய்திகள் அனைத்திற்கும் தடை விதிக்க முடியாது.இருப்பினும், ஜெயலலிதா, சசிகலாவின் சொந்த வாழ்க்கை குறித்து வெளியாகும் தனிப்பட்ட செய்திகளுக்கு 2 வாரகாலத்திற்கு தடை விதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications