கருணாநிதியின் பேச்சு மகிழ்ச்சி அளிக்கிறது: வாசன்
திருச்சி:
தேர்தல் கூட்டணிகள் மாறும் என்று கருணாநிதி கூறியிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று ஜி.கே.வாசன்கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் ஜி.கே.வாசன் திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:
சென்னையில் வரும் 15ம் தேதி காமராஜர் நூற்றாண்டு விழா நடக்கிறது. காங்கிரஸ் கட்சியின் குடும்ப விழாவாகஇந்த விழா அமையும். விழாவில் பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர்சிங், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்கமல்நாத் உள்பட முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி வைத்துகொள்ளும். மதசார்பற்ற ஒரு அரசை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டு சோனியா காந்தி செயல்பட்டுவருகிறார்.
வரும் தேர்தலில் கூட்டணிகள் மாறும் என்ற தி.மு.க.தலைவர் கருணாநிதியின் கருத்து மகிழ்ச்சி அளிக்கிறது.இருந்தபோதிலும் கூட்டணி குறித்து தற்போது எதுவும் சொல்ல முடியாது.
தனது ஊழியர்களையே தமிழக அரசு குற்றவாளிகளாக பார்க்கிறது. அவர்களை அரசு தனது பிள்ளைகளாக பார்க்கவேண்டும் என்றார் வாசன்.












Click it and Unblock the Notifications