மீண்டும் ஆயுத போராட்டத்துக்கு தயார்: புலிகள் அறிவிப்பு
கொழும்பு:
இலங்கையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயின் ஆட்சி போய், வேறொரு ஆட்சி வந்து போரைத் திணித்தால்நிச்சயம் மீண்டும் ஆயுதப் போராட்டத்தில் இறங்குவோம் என விடுதலைப் புலிகள் எச்சரித்துள்ளனர்.
புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவரும், ஆண்டன் பாலசிங்கம் வகித்து வரும் ஆலோசகர் பொறுப்பையும்விரைவில் வகிக்கப் போகும் எஸ்.பி.தமிழ்ச் செல்வன் கூறியதாவது:
இலங்கையில் அமைதி நிலவ வேண்டும், எங்கள் மக்கள் அமைதியாக வாழ வேண்டும் என்பதில் நாங்கள்இப்போதும் மிகத் தீவிரமாகவே இருக்கிறோம். அதே நேரத்தில் எந்த நேரத்திலும் போருக்கும் நாங்கள் தயார்.
ரணிலின் ஆட்சி போய் இன்னொரு ஆட்சி வந்தால், அவர்கள் எங்கள் மீது போரைத் திணித்தால் நிச்சயம் அதைஎதிர்கொள்வோம். மீண்டும் ஆயுதப் போராட்டத்துக்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.
இனப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண வேண்டும் என்பதில் எங்கள் இயக்கம் மிகத் தீவிரமாக உள்ளது என்றார்.
அமைச்சரின் இஸ்ரேலிய பயணம் ஏன்?
இதற்கியைே இலங்கை பாதுகாப்பு அமைச்சர் திலக் மரப்பனா மற்றும் கடற்படைத் தலைவர் தயா சந்தகிரிஆகியோர் கடந்த வாரம் இஸ்ரேல் சென்று வந்தது தமிழர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இலங்கைராணுவம், கப்பல் படை, விமானப் படைகளுக்கு ஆயுதங்கள், போர் விமானங்களில் பெரும்பாலனவைஇஸ்ரேலில் இருந்து தான் வருகின்றன.
புலிகள் போர் நிறுத்தம் அறிவித்துள்ள நிலையில் இலங்கை மீண்டும் ஆயுதக் குவிப்பில் ஈடுபட முயல்வதாகவும்,அதற்காகவே அமைச்சர் இஸ்ரேல் சென்று வந்தாகவும் முக்கிய தமிழ் அரசியல் புள்ளியான செல்வம்அடைக்கலநாதன் குற்றம் சாட்டியுள்ளார்.
அமைதியை அரசு விரும்பவில்லை, மீண்டும் போருக்கு அரசு தயாராகிறது என்பதைத் தான் இந்த இஸ்ரேலியப்பயணம் சுட்டிக் காட்டுகிறது. பேச்சு நடத்திக் கொண்டே போருக்குத் தயாராக முந்தைய அரசுகள் செய்த அதேதவறை மீண்டும் செய்ய இந்த அரசும் நினைக்கிறது என்று கூறியுள்ளார் அடைக்கலநாதன்.












Click it and Unblock the Notifications