புளிய மரத்தில் கார் மோதி 3 இளைஞர்கள் பலி

Subscribe to Oneindia Tamil

பூந்தமல்லி:

சென்னை அருகே இன்று அதிகாலை புளிய மரத்தில் கார் மோதி 3 இளைஞர்கள் பலியாயினர். 2 பேர் படுகாயம் அடைந்தார்கள்.

சென்னையை அடுத்த குன்றத்தூரில் கார்த்திக் என்பவரின் பண்ணை வீடு உள்ளது. இதன் உரிமையாளர் மகன் கார்த்திக்(வயது 22). அவரது நண்பர்கள் நிலவு (வயது 25), பிரசாந்த் (வயது 23), நஸ்மின் (வயது 22), ஜெய்சன்(வயது 21) ஆகியோர் நேற்றிரவு பண்ணை வீட்டில் தங்கினர்.

இன்று அதிகாலை அவர்கள் புதிய மாருதி காரில் ஸ்ரீபெரும்புதூர் புறப்பட்டு சென்றார்கள். காரை கார்த்திக் ஓட்டிச் சென்றார்.

குன்றத்தூர்- ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் அமரம்பேடு கிராம சந்திப்பு அருகே சென்றபோது சாலையோர புளிய மரத்தில் பயங்கர வேகத்தில் மோதி பல்டி அடித்து அருகே இருந்த குட்டையில் கவிழ்ந்தது.

இதில் கார்த்திக், நிலவு, பிரசாந்த் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நஸ்மின், ஜெய்சன் படுகாயம் அடைந்தனர்.

நஸ்மின், ஜெய்சன் ஆகியோர் அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+