5 அதிமுக மாவட்டச் செயலாளர்கள் திடீர் மாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் 5 பேர் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரை கடலூர் கிழக்கு மாவட்டச் செயலராக இருந்த அமைச்சர் சம்பத், ஈரோடு வடக்கு மாவட்டச் செயலர்பொறுப்பிலிருந்து கே.கே.காளியப்பன் எம்.பி ஆகியோர் அந்தப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

புதிய மாவட்டச் செயலர்கள் நியமனம் தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டஅறிக்கை:

கோவை புறநகர் வடக்கு மாவட்ட அவைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் எம்.எல்.ஏ., வடக்கு மாவட்டச்செயலர் ஏ.கே.செல்வராஜ் எம். எல்.ஏ., கடலூர் கிழக்கு மாவட்டச் செயலர் எம்.சி.சம்பத், ஈரோடு வடக்கு மாவட்டச்செயலர் கே.கே.காளியப்பன் ஆகியோர் அப்பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதே போன்று கோவை புறநகர் தெற்கு மாவட்ட அவைத் தலைவர் ஆர்.திருமலைச்சாமி, கோவை புறநகர் வடக்குமாவட்ட ஜெ.ஜெயலலிதா பேரவைச் செயலர் திருப்பூர் சி.சிவசாமி எம்.எல்.ஏ, கடலூர் கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர்இளைஞர் அணிச் செயலர் சொரத்தூர் ஆர்.ராஜேந்திரன், ஈரோடு வடக்கு மாவட்ட ஜெ.ஜெயலலிதா பேரவைஇணைச் செயலர் சிந்து. ரவிச்சந்திரன் ஆகியோரும் அந்தந்தப் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்படுகின்றனர்.

புதிய மாவட்டச் செயலாளர்கள்:

கோவை புறநகர் தெற்கு- அமைச்சர் பா.வெ.தாமோதரன்

கோவை புறநகர் வடக்கு மாவட்டம்:- திருப்பூர் சி.சிவசாமி எம்.எல்.ஏ.-மாவட்டச் செயலர்

புதுக்கோட்டை மாவட்டம்- ஆர்.ராமசாமி

கடலூர் கிழக்கு மாவட்ட-: சொரத்தூர் ஆர்.ராஜேந்திரன்

ஈரோடு வடக்கு மாவட்டம்: சிந்து ரவிச்சந்திரன்

பதவிப் பறிப்பு காரணம் என்ன?

கடலூர் மாவட்டத்தில் இருந்து சென்னை நகருக்கு லாரிகளில் மணல் கடத்தப்பட்டு வரும் விவகாரத்தில் அமைச்சர்சி.சம்பத் மீது குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இதனால் அவரது அமைச்சர் பதவியைப் பறிக்க முதல்வர் ஜெயலலிதாதிட்டமிட்டிருந்தார். ஆனால், தப்பிவிட்டார். இந் நிலையில் இப்போது இவரது மாவட்டச் செயலாளர் பதவிபறிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டையைப் பொறுத்தவரை இதுவரை மாவட்டச் செயலாளராக இருந்த ராஜேந்திரன், மத்திய அமைச்சர்திருநாவுக்கரசரின் தீவிர ஆதரவாளராவார். இதை கட்சியின் போட்டுக் கொடுத்ததால் அவரிடம் இருந்து பதவிபறிக்கப்பட்டுள்ளது.

ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலில் சிறப்பாக பணியாற்றியதற்காக கோவை வடக்கு மாவட்டச் செயலாளர்பதவியைப் பிடித்துள்ளார் எம்.எல்.ஏ. சிவசாமி.

கோவை தெற்கு மாவட்டத்தில் அமைச்சர் வேலுச்சாமி- மாவட்டச் செயலாளர் சுகுமார் இடையே நடந்த மோதலில்சுகுமார் பதவி காலியாகியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானி பேரூராட்சியில் நடந்த இடைத் தேர்தலில் அதிமுகவை திமுக தோற்கடித்ததால் எம்.பி.காளியப்பனிடம் இருந்து மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. மேலும் தனது வீட்டுக் கல்யாணத்தைக்காட்டி வசூல் வேட்டை நடத்திய விவரமும் தலைமைக்கு வந்து சேர்ந்ததால் இவருக்கு கல்தா தரப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+