3 கலெக்டர்கள் மாற்றம்: முதல்வருக்கு புதிய செயலாளர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் 3 மாவட்ட ஆட்சித் தலைவர்கள் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த ககந்தீப் சிங் பேடி, கடலூருக்கு மாற்றப்பட்டுள்ளார். கடலூர்மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த தங்கசுவாமி, முதல்வர் ஜெயலலிதாவின் இணைச் செயலாளராகமாற்றப்பட்டுள்ளார்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ரமேஷ் லக்கானி கன்னியாகுமரி கலெக்டராக மாற்றப்பட்டார்.செய்தித்துறை இயக்குனராக இருந்த நடராஜன் பெரம்பலூர் கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications