For Daily Alerts
Just In
மேட்டூர் அணையை பார்வையிட்ட ஓ.பி.
சேலம்:
பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், மேட்டூர் அணைக்குச் சென்று நீர் நிலவரம் குறித்துஅதிகாரிகளிடம் நேரில் கேட்டறிந்தார்.
மேட்டூர் அணைக்குச் சென்ற அமைச்சர் பன்னீர் செல்வம் அங்குள்ள கவர்னர் பாயின்ட், நீர் அளவிடும் பகுதி,ஆய்வுப் பகுதி உள்ளிட்ட பகுதிகளை அதிகாரிகளுடன் ஆராய்ந்தார்.
அதன் பின்னர் பொதுப்பணித்துறை பொறியாளர்களுடன் அரை மணி நேரம் அவர் ஆலோசனை நடத்தினார்.
அமைச்சரின் வருகையின்போது அணையின் நீர்மட்டம் 25.70 அடியாக இருந்தது. நீர் வரத்து வினாடிக்கு 324 கனஅடியாக இருந்தது.
காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை கர்நாடகம் தொடர்ந்து அமலாக்கு மறுத்து வரும் நிலையில் அணையை பன்னீர்நேரில் பார்வையிட்டுள்ளார்.


