தஞ்சை பகுதியில் கர்நாடக விவசாயிகள் ஆய்வு!
தஞ்சாவூர்:
கர்நாடக விவசாயிகள் குழு இன்று தஞ்சாவூர் வந்து சேர்ந்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த எம்.ஐ.டி.எஸ். நிறுவனம், தமிழக கர்நாடக விவசாயிகளின் கூட்டு ஆலோசனைக்கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி சமீபத்தில் தமிழக விவசாயிகள் குழு கர்நாடகம் சென்றுஅங்குள்ள நீர் நிலவரத்தை பார்வையிட்டது.
மேலும் பெங்களூரில் நடந்த கூட்டத்தில் தமிழக விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து இன்று கர்நாடக விவசாயிகள் குழு தமிழகம் வந்தது. தஞ்சாவூர் வந்த அக் குழுவினர் பல்வேறுவயல்களுக்குச் சென்று பார்வையிட்டனர். நாளை மறுநாள் நடக்கவுள்ள கூட்டத்தில் இரு மாநில விவசாயிகளும்பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள்.
கர்நாடக விவசாயிகள் குழுவுக்கு புட்டண்ணய்யா என்பவர் தலைமையேற்று வந்துள்ளார். அவர் கூறுகையில்,தமிழகத்தில் பயிடும் முறை குறித்து சில தவறான தகவல்கள் கர்நாடகத்தில் நிலவுவதாக இங்குள்ள விவசாயிகள்தெவித்தனர். அதுகுறித்து நாங்கள் நேரடியாக கேட்டறியவுள்ளோம் என்றார்.
கர்நாடக விவசாயிகளுடன் பெங்களூரைச் சேர்ந்த விமோச்சனா என்ற சமூக நல அமைப்பைச் சேர்ந்த செலீனும்தமிழகம் வந்துள்ளார். தமிழக- கர்நாடக விவசாயிகளுக்கு இடையே நல்லுறவை ஏற்படுத்தும் முயற்சியில்எம்.ஐ.டி.எஸ். மற்றும் விமோச்சனா அமைப்புகள் ஈடுபட்டுள்ளன.












Click it and Unblock the Notifications