திருநாவுக்கரசருக்கு 55 வயது: வாஜ்பாய் வாழ்த்து
சேலம்:
மத்திய தொலைத் தொடர்புத் துறை இணை அமைச்சர் திருநாவுக்கரசர் தனது 55-வது பிறந்த நாளை நேற்றுசென்னையில் கொண்டாடினார்.
எம்.ஜி.ஆர். காலத்தில் அமைச்சர், துணை சபாநாயகராக இருந்து, பின்னர் தனிக்கட்சி கண்டு, தற்போதுபா.ஜ.க.வில் இணைந்து மத்திய அமைச்சராக இருப்பவர் திருநாவுக்கரசர். எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின்ஜெயலலிதாவை அரசியலில் கால் ஊன்றச் செய்ததில் மிக முக்கிய பங்கு வகித்தவர்.
அவருக்கு நேற்று பிறந்த நாள். இதையடுத்து அண்ணா, எம்.ஜி.ஆர் சமாதிகளுக்குச் சென்று மலர் வளையம்வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் வீட்டில் குடும்பத்தினர், கட்சியினருடன் கேக் வெட்டினார்.
அவருக்கு பிரதமர் வாஜ்பாய், துணைப் பிரதமர் அத்வானி ஆகியோர் தொலைபேசியில் வாழ்த்துத் தெரிவித்தனர்.
பா.ஜ.க. பொதுச் செயலாளர் இல.கணேசன், முன்னாள் தமிழக பா.ஜ.க. தலைவர் கிருபாநிதி உள்ளிட்டபா.ஜ.கவினர் நேரில் வாழ்த்துத் தெரிவித்தனர். நடிகையும் திருநாவுக்கரசரின் தீவிர ஆதரவாளருமான லதா,நடிகர் விவேக் ஆகியோரும் நேரில் வாழ்த்தினர்.












Click it and Unblock the Notifications