விஜயகாந்த்தைப் பார்க்க "வண்டியேறிய" மாணவிகள்!
கோவை:
நடிகர் விஜயகாந்த்தைப் பார்ப்பதற்காக குன்னூரைச் சேர்ந்த நான்கு பள்ளி மாணவிகள் யாருக்கும் தெரியாமல்சென்னை புறப்பட்டனர். அவர்களை கோவையில் பெண் போலீஸார் மடக்கி குன்னூருக்குத் திருப்பி அனுப்பிவைத்தனர்.
ரேவதி, நிரோஷா, செல்வகுமாரி மற்றும் வளர்மதி. நான்கு பேரும் நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள அரசுமகளிர் மேல்நிலைப் பள்ளியில் 9 மற்றும் 10ம் படித்து வருபவர்கள். பள்ளிக்கு அருகிலேயே உள்ள காப்பகத்தில்தங்கியிருந்தனர்.
நான்கு பேரும் விஜயகாந்த் ரசிகைகளாம். எப்படியாவது விஜயகாந்த்தை சந்தித்து அவருடன் போட்டோ எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்த அவர்கள் திங்கள்கிழமை சென்னை செல்ல முடிவு செய்தனர்.
கையில் இருந்த பணத்துடன் கோவைக்கு வண்டியேறினர். அங்கு காந்திபுரம் மத்திய பஸ் நிலையத்தில் சென்னைபஸ்ஸைத் தேடி சுற்றிக் கொண்டிருந்தபோது ஒரு ஆட்டோ டிரைவர் அவர்களது நடமாட்டம் குறித்துசந்தேகமடைந்தார்.
மாணவிகளை அணுகி எங்கே போக வேண்டும் என்று கேட்டார். சென்னை பஸ்ஸுக்கு போக வேண்டும் என்றுமாணவிகள் கூறியுள்ளனர். அவர்களிடம் பேசியபோது, ஊரை விட்டு ஓடி வந்தவர்கள் என்பது ஆட்டோடிரைவருக்குப் புரிந்தது.
நல்ல குணம் படைத்த அந்த டிரைவர், ஒரு இடத்தில் மாணவிகளை உட்கார வைத்து விட்டு இங்குதான் பஸ் வரும்,காத்திருங்கள் என்று கூறி விட்டு, மகளிர் காவல் நிலையத்திற்கு போன் மூலம் தகவல் சொன்னார்.
உடனடியாக பெண் போலீஸார் அங்கு விரைந்து வந்தனர். நான்கு மாணவிகளையும் பிடித்து விசாரித்தனர்.அழுதபடியே நான்கு பேரும் தங்களது பயணத்தின் பின்னணியை விவரித்தனர். அவர்களைக் கண்டித்த போலீசார்தாங்களே நான்கு பேரையும் குன்னூருக்கு திரும்ப அழைத்துச் சென்று அவர்கள் தங்கியிருந்த காப்பகத்தில்ஒப்படைத்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications