மீண்டும் ஜீவஜோதியை கடத்த முயன்ற சரவண பவன் ராஜகோபால் அதிரடி கைது

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்:

Jeevajothiஜீவஜோதியை நள்ளிரவில் வீடு புகுந்து கடத்த முயன்றதாக சரவண பவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபால் மற்றும்அவரது வழக்கறிஞர், இரு கூலியாட்களை போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

ஏற்கனவே இரு மனைவிகள் கொண்ட ராஜகோபால், தனது ஹோட்டலில் மேலாளராகப் பணியாற்றியவரின்மகளான ஜீவஜோதி மேல் காதல் கொண்டார். அவரைத் திருமணம் செய்ய முயன்றார். பணம் கொடுத்து அந்தக்குடும்பத்தை வளைத்தார்.

ஆனால், ஜீவஜோதி ஏற்கனவே பிரின்ஸ் சாந்தகுமார் என்பரைக் காதலித்து வந்தார். இருவருக்கும் ராஜகோபாலேமுன் நின்று திருமணம் செய்து வைத்தார். ஆனாலும் ராஜகோபால்- ஜீவஜோதி தொடர்பு நீடித்தது.

இந் நிலையில் பிரின்ஸ் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரை ராஜகோபாலின் கூலியாட்கள் தான்கொலை செய்து கொடைக்கானல் மலையில் வீசியதாக வழக்கு நடந்து வருகிறது.

இது நடந்தது 2 ஆண்டுகளுக்கு முன்.

இந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது. கொலைச் சம்பவத்திற்குப் பிறகு ஜீவஜோதி தனது சொந்த ஊரானநாகப்பட்டனம் மாவட்டம் வேதாரண்யத்திற்குச் சென்று தனது பெற்றோருடன் தங்கியிருந்தார். ராஜகோபால்கைதாகி ஜாமீனில் வெளியே வந்துவிட்டார்.

இந் நிலையில் நேற்றிரவு ராஜகோபாலும் அவரது வக்கீல் ராஜேந்திரன் என்பவரும் வேதாரண்யம் அருகே உள்ளதோத்தாக்குடி கிராமத்தில் உள்ள ஜீவஜோதியின் வீட்டுக்குச் சென்றுள்ளனர்.

வரும் 21ம் தேதி ஆரம்பிக்க உள்ள இந்தக் கொலை வழக்கில் தங்களுக்கு சாதகமாக சாட்சி கூறுமாறுஜீவஜோதியை அவர்கள் வற்புறுத்தியதாகத் தெரிகிறது. ஆனால் அவர் மறுக்கவே, வலுக்கட்டாயமாக தங்களதுகாரில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.

இதைப் பார்த்த ஊர் மக்கள் திரண்டு வந்து காரை மறித்து வக்கீல் ராஜேந்திரனைப் பிடித்துக் கொண்டனர். ஆனால்ராஜகோபால் தனது இரு கூலியாட்களுடன் அங்கிருந்து காரில் தப்பிவிட்டார்.

இதுகுறித்து போலீஸாருக்குத் தகவல் போகவே, காரைத் தேடி போலீஸ் படை விரைந்தது.

தஞ்சாவூர், தொல்காப்பியர் பூங்கா அருகே சென்று கொண்டிருந்த காரை வழிமறித்து தடுத்து நிறுத்திய போலீஸார்ராஜகோபாலைக் கைது செய்தனர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்ட ராஜகோபால், ராஜேந்திரன், ராஜகோபாலின் 2 கூலியாட்கள் ஆகியோர் தற்போதுவேதாரண்யம் மகளிர் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

விசாரணைக்குப் பிறகு அவர்கள் நான்கு பேரும் திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

ராஜகோபாலின் காரிலிருந்து ஏராளமான பணம் கைப்பற்றப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, மூத்த வழக்கறிஞரான ராஜேந்திரன் கைது செய்யப்பட்டது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றவக்கீல்கள், தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டியை சந்தித்து முறையிட்டனர்.

Rajagopal with his second wife kiruthigaஇதையடுத்து அரசு வக்கீலை அழைத்து விசாரித்த சுபாஷன் ரெட்டி, ராஜேந்திரனை நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கஉத்தரவிட்டார். மேலும் அவர் சென்னை நகருக்குள் வரக் கூடாது, சொந்த ஊரான உதகமண்டலத்தில் தான்தங்கியிருக்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

பெண்ணைக் கடத்தி, அவரது கணவரைக் கொலை செய்ததாக பரபரப்பாக பேசப்பட்ட ராஜகோபால் மீண்டும் அதேபெண்ணைக் கடத்தி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

ஜீவஜோதி மீது ராஜகோபாவுக்கு இன்னும் ஆசை குறையவில்லை என்று தெரிகிறது.

இந் நிலையில் ராஜகோபாலுக்கு எதிராக சாட்சி சொல்லாமல் இருக்க ஜீவஜோதி பெரிய அளவில் பணம்கேட்டதாகவும் ஆனால், குறைந்த அளவிலேயே பணம் தர ராஜகோபால் முன் வந்ததால் அந்த பேரம் படியவில்லைஎன்றும் கூறப்படுகிறது. நேற்று ராஜகோபாலின் காரில் சுமார் 7 லட்சத்துக்கு 500 ரூபாய் கட்டுக்கள் பறிமுதல்செய்யப்பட்டன. இந்தப் பணம் கூட ஜீவஜோதிக்கு பேரம் பேச அவர் எடுத்துச் சென்ற பணமாகவே தெரிகிறது.

இந்தத் தொகையில் தான் பிரச்சனையே ஏற்பட்டு வாக்குவாதம் வலுத்ததாகவும், இதன் பின்னர் தான்ஜீவஜோதியை ராஜகோபால் தரப்பினர் காரில் கடத்த முயன்றதாகவும் தெரிகிறது.

-->
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+