அந்தமான சென்ற விமான என்ஜின் செயலிழப்பு: அவசரமாய் சென்னை திரும்பியது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையிலிருந்து அந்தமானுக்குப் புறப்பட்டுச் சென்ற இந்தியன் ஏர்லைன்சின் துணை நிறுவனமானஅலையன்ஸ் ஏர் விமானத்தின் என்ஜின் செயலிழந்தது. இதையடுத்து அந்த விமானம் உடனடியாக சென்னைதிரும்பியது.

இன்று காலை 5.15 மணிக்கு மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து 70 பயணிகளுடன் போர்ட் பிளேருக்குஅந்த விமானம் கிளம்பியது. ஆனால், ஒன்றரை மணி நேரம் பறந்த நிலையில் விமானத்தின் ஒரு என்ஜின்இயங்காமல் போனது.

இதையடுத்து பைலட் உடனே சென்னை விமான நிலையத் தரைக் கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல் தந்தார்.இதைத் தொடர்ந்து அவசரகால லேண்டிங்குக்கு விமான நிலையம் தயாரானது. ஆனால், எந்தவிதமானபிரச்சனையும் இல்லாமல் விமானம் பத்திரமாக திரும்பி வந்தது. பாதுகாப்பாக தரையிறங்கியது.

முதலில் என்ஜின் கோளாறு என்று கூறிய விமான நிலைய வட்டாரங்கள் பின்னர், அதை மறுத்துள்ளன.விமான்ததுறையின் செய்தித் தொடர்பாளர் மூலமாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், விமானத்தின் ஏர்டேட்டா கம்ப்யூட்டரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தான் விமானம் திரும்பி வந்ததாகவும்என்ஜினில் கோளாறு ஏதும் இல்லை என்றும் விளக்கம் தரப்பட்டுள்ளது.

இந்த விமானத்தின் பயணிகள் அனைவரும் நகரின் பல்வேறு ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.கோளாறை சரி செய்வதற்கான பாகங்கள் டெல்லியில் இருந்து கொண்டு வரப்படுவதாகவும், அவை வந்தவுடன்கோளாறு சரி செய்யப்பட்டு விமானம் நாளை தான் மீண்டும் போர்ட் பிளேர் செல்லும் என்றும் அறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+