நீங்க பேசக் கூடாது..: காங்கிரஸை சாடும் சமூக நீதி கட்சி
சென்னை:
காமராஜர் மறைந்து 28 ஆண்டுகள் ஆகி விட்டது. ஆனால், காங்கிஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில்அவருக்கு ஒரு சிலை கூட வைக்க முடியாத காங்கிரஸ் தலைவர்கள், முதல்வர் ஜெயலலிதாவை விமர்சிப்பதற்குஅருகதை இல்லாதவர்கள் என்று சமூக நீதிக் கட்சித் தலைவர் ஜெகவீரபாண்டியன் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், விருதுநகரில் அமையவுள்ள காமராஜர் நினைவிடத்திற்கான அடிக்கல் நாட்டுவிழாவை, சென்னைத் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா நடத்தியதை காங்கிரஸ் செயல் தலைவர்இளங்கோவன் கடுமையாக விமர்சித்துள்ளது கண்டிக்கத்தக்கது.
காமராஜர் மறைந்து 28 ஆண்டுகள் ஆகி விட்டன. ஆனால், சென்னை சத்தியமூர்த்தி பவனிலோ அல்லதுதேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்திலோ காமராஜருக்கு சிலை வைக்க வேண்டும் என்று தோன்றியதாகாங்கிரஸாருக்கு?
கோஷ்டிச் சண்டையிலேயே பொழுதைக் கழிக்கும் அவர்கள், காமராஜருக்கு சிலை வைக்க முடியாத அவர்கள்,ஜெயலலிதாவை விமர்சிப்பதற்கும் லாயக்கில்லாதவர்கள் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications