காங்கிரஸ் தனித்தே போட்டியிடும்: சோ.பா. சொல்கிறார்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 எம்.பி தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று, அந்த வெற்றியைசோனியா காந்தியிடம் சமர்ப்பிக்கும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் சோ.பாலகிருஷ்ணன்கூறியுள்ளார்.

காமராஜர் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேரு நிகழ்ச்சிகள் நடந்துவருகின்றன. அதன் ஒரு பகுதியாக காமராஜர் படம் பொறிக்கப்பட் ராட்சத ஹீலியம் பலூன் சென்னைதேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.

அதேபோன்ற இன்னொரு பலூன் சத்தியமூர்த்தி பவன் கட்டடத்தின் உச்சியில் பறக்க விடப்பட்டது.

நிகழ்ச்சியில் சோ.பா. பேசுகையில், காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி மோதல் இல்லை, எங்களுக்குள் எந்தப் பிளவும்இல்லை. தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 எம்.பி. இடங்களிலும் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெறும்.அந்த வெற்றியை சோனியாவிடம் சமர்ப்பிப்போம். அவர்தான் அடுத்த பிரதமர்.

வருகிற தேர்தலில் தனித்தே போட்டியிடுவோம். அத்தனை இடத்திலும் வெற்றி பெற வேண்டும் என்ற வெறிஎங்களுக்குள் வந்துள்ளது. தமிழகத்தில் கட்டாயம் காமராஜர் ஆட்சி உருவாகும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+