கள்ள சாராய கும்பலிடம் மாமூல்: காஞ்சிபுரம் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
காஞ்சிபுரம்:
கள்ளச் சாராயத்தை ஒழிக்கத் தவறிய காஞ்சிபுரம் சிவகாஞ்சி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (சட்டம்-ஒழங்குபிரிவு) அழகிரிசாமி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
மாவட்ட எஸ்.பி. மாசானமுத்துவின் பரிந்துரையின் பேரில் செங்கை சரக டி.ஐ.ஜி. ராஜேந்திரன் இந்தநடவடிக்கையை எடுத்ள்ளார்.
சாராய கும்பலிடம் அழகிரிசாமி மாமூல் வாங்கி வந்ததாகத் தெரிகிறது. இதனால் இப் பகுதியில் கள்ளச் சாராயம்கொடி கட்டிப் பறந்தது. சாராய கும்பல்களிடம் இருந்து தினந்தோறும் ரூ. 5,000 அளவுக்கு இவருக்கு பணம்தரப்பட்டு வந்துள்ளது.
இதையடுத்து மாசானமுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கச் செய்துள்ளார். கள்ளச் சாராயத்தை ஒழிக்க தவறும்மற்ற போலீஸ் அதிகாரிகள் மீது இதே போல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி.எச்சரித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் தீவிர கள்ளச் சாராய வேட்டைக்கும் எஸ்.பி. மாசானமுத்து உத்தரவிட்டுள்ளார். சிவகாஞ்சி பகுதியில்மட்டும் 175 லிட்டர் எரிசாராயம், 300 பாக்கெட் கள்ளச் சாராயம், பாக்கெட்டில் சாராயம் அடைக்கப் பயன்படும் 7எந்திரங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. கள்ளச் சாராய வியாபாரிகளான குமார், ஜெயராமன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications