கைதிகளுக்கு கஞ்சா விற்ற வார்டன் கைது
சேலம்
சேலம் மத்திய சிறையில் கைதிகள் மூலம் கைதிகளுக்கு கஞ்சா விற்ற சிறை வார்டன் கைது செய்யப்பட்டார்.
தமிழக சிறைகளில் கைதிகளுக்கு சிகரெட், சோப்பு, கஞ்சா, பான்பராக் ஆகியவற்றை சிறைகளில் பணியாற்றும்போலீஸ்கார்களே வாங்கித் தருவதும், அதில் கைதிகளிடம் இருந்து கமிஷன் அடிப்பதும் சர்வ சாதாரணம்.
குறிப்பாக சேலம் சிறையில் கைதிகளிடையே கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துக்கள் புழக்கம் எப்போதுமே மிகஅதிகம். காரணம் அங்குள்ள வார்டன்கள்.
இந் நிலையில் சிறைக் கண்காணிப்பாளர் பாலன்சிறையில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது தாயப்பன் என்றகைதி, சில கைதிகளுக்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்தார்.
இதையடுத்து தாயப்பனை அழைத்து பாலன் விசாரணை நடத்தியபோது,சிறை வார்டன் அனந்த நாராயணன்என்பவர்தான் தன்னிடம் கஞ்சாவைக் கொடுத்து விற்கச் சொன்னதாகத் தெரிவிததார்.
இதைத் தொடர்ந்து அனந்த நாராயணன் கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்குத் தொடர கண்காணிப்பாளர்பாலன் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications