ப்ளஸ் 2 சிறப்பு தேர்வுகள்: இன்று மாலை முடிவுகள் வெளியீடு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ப்ளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியிடப்படுகின்றன.
ப்ளஸ் 2 பொதுத் தேர்தலில் மூன்று பாடங்களில் மட்டும் தோல்வி அடைந்தவர்கள் இந்த ஆண்டே உயர்கல்வியைத் தொடரும் வகையில் சிறப்பு துணைத் தேர்வுகள் நடந்தன. இத் தேர்வுகள் கடந்த மாதம் 26ம் தேதிஆரம்பித்து இந்த மாதம் 4ம் தேதி முடிவடைந்தன.
தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வுகளை எழுதினர். கடந்த நான்கு நாட்களுக்குமுன்னதாக திருத்தும் பணி முடிவடைந்தது.
இந்தத் தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியிடப்படுகின்றன. எஸ்.எஸ்.எல்.சி. சிறப்புத் துணைத் தேர்வுவிடைத்தாள்கள் திருத்தம் பணியும் இன்றுடன் முடிவடைகிறது.
இன்னும் ஒரு வாரத்துக்குள் இந்தத் தேர்வு முடிவும் வெளியாகும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications