மகள் தற்கொலையை மறைத்த கள்ளக் காதல் தாய்

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்:

தாயின் கள்ளக் காதலால் மனமுடைந்த கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நாகர்கோவில் அருகே லாயம் என்ற இடத்தை சேர்ந்தவர் செளகத் அலி. இவரது மனைவி ஜன்னத். இவர்களுக்குமூன்று குழந்தைகள்.

செளக்கத் அலி வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். அப்போது நாகர்கோவிலில் டிராவல்ஸ் நடத்தி வரும்மோகன்குமாருக்கும் ஜன்னத்துக்கும் கள்ளக் காதல் ஏற்பட்டது.

இந்த உறவு தொடர்ந்தபோதே நாகர்கோவிலைச் சேர்ந்த ரமேஷ் என்ற வாலிபருடனும் ஜன்னத்துக்கு பழக்கம்ஏற்பட்டது. தாயாரின் இந்த கள்ள உறவுகளை மகள் நசீம் நிஷா (வயது 19) கண்டித்தார். ஆனால், அதை தாயார்கண்டு கொள்ளவில்லை.

இதனால் மனமுடைந்த நசீம் நிஷா கடந்த மாதம் 18ம் தேதி வீட்டிலேயே தூக்கு போட்டுத் தற்கொலை செய்துகொண்டார். ஆனால், கள்ளக்காதலர்கள் மோகன்குமார், ரமேஷ் ஆகியோரின் உதவியுடன், நசீம் நிஷா நோயால்இறந்ததா டாக்டரிடம் போலியாகத சான்றிதழ் வாங்கி உடலை அடக்கம் செய்து விட்டார் ஜன்னத்..

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகளுக்கும், பத்திரிக்கைகளுக்கும் மர்மக் கடிதங்கள் வந்தன. இதைத் தொடர்ந்துபோலீஸார் நடத்திய தீவிர விசாரணையில் தான் உண்மை வெளிப்பட்டது.

இதையடுத்து மோகன்குமார் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், ஜன்னத், ரமேஷ்,போலிச் சான்றிதழ் தந்த டாக்டர் நடராஜன் ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர்.

இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+