பாஜக ஒரு நாடக கம்பெனி: வீரமணி

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி:

ராமர் கோயில் பிரச்சனையை எழுப்பி நாட்டைத் துண்டாட பா.ஜ.க. முயல்வதாக திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கி.வீரமணி குற்றம் சாட்டினார்.

தூத்துக்குடியில் திராவிடர் கழக பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:

தமிழர் சமூக விழிப்புணர்வுக்கான எழுச்சிப் பயணம் தமிழகத்தில் நடந்து வருகிறது. சென்னையில் வரும் 25ம் தேதிஇந்தப் பயணம் முடிவடைகிறது.

முக்கியப் பிரச்சனைகளை மையப்படுத்தி இப்பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சாதி என்ற பெயரில் இந்தமண்ணுக்கு உரியவர்களை பல நூற்றாண்டுகளாக அடிமைகளாக வைத்துள்ளனர். சாதியினால் ஏற்பட்டகேட்டிலிருந்து மக்களை தூக்கிவிடுவதற்காக இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெரியார் என்ற மருந்கை கொடுத்துதான் மண்டல் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்த முடிந்தது. ஆனால் ஆர்.எஸ்.எஸ்., சங்க பரிவார் போன்ற அமைப்புகளை உள்ளடக்கிய பாஜக என்ற நாடக கம்பெனி மண்டல் கமிஷனைஎதிர்த்தது.

மண்டல் கமிஷன் விவகாரம் முன்னணிக்கு வந்தபோது மக்களை திசைதிருப்ப அயோத்தியில் ராமர் கோயில் கட்டவேண்டும் என்று ரதயாத்திரையை நடத்தினர்.

மண்டலுக்கு சமாதி கட்டவும் ராமருக்கு கோயில் கட்டவும் ரத யாத்திரை மேற்கொண்டனர். பாஜக அரசில் பொதுச்சொத்தை விற்பதற்காகவே அருண் செளரி என்று ஓர் அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார். தனியார் மயமாக்கலால்இடஒதுக்கீடு பாதிக்கப்பட்டுள்ளது.

எனவேதான், தனியார்துறைகளிலும் இடஒதுக்கீடு தேவை என்ற கோரிக்கையை எழுப்பினோம்.அக்கோரிக்கையை வலுயுறுத்தியும் இந்த எழுச்சிப் பயணத்தை தொடங்கியுள்ளோம். கோழிச் சண்டை மாதிரிஅல்லாவுக்கும் ராமருக்கும் சண்டை மூட்டியுள்ளனர் காவிப் படையினர்.

ராமர் கோயில் பிரச்சனையைக் காட்டி ரத்த ஆறு ஓடும் அளவுக்கு நிலைமையை மோசமாக்கியுள்ளனர். நாடுசுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகளகியும் பாதுகாக்கப்பட்ட குடிநீரைக் கூட மக்களுக்குத் தரமுடியவில்லை.

இந் நிலையில் ராமர் கோயில் பிரச்சினைக்கு முக்கியத்துவம் தருவது ஏன்? அயோத்தியில் ஏற்கெனவே 6,000 ராமர்கோயில்கள் உள்ளன. 6,001வது ராமர் கோயில் எதற்கு?. மதவெறியை மாய்த்தால் தான் மானுடம் உயரும் என்றார்வீரமணி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+