நக்கீரன் கோபால் ஜாமீன் மனு: ஆகஸ்ட் 4ம் தேதி தீர்ப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பொடா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நக்கீரன் ஆசிரியர் கோபாலின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஆகஸ்ட் 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 12ம் தேதி கோபால் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் அவர் மீது பொடா சட்டம் பாய்ந்தது. இந்த வழக்கிலிருந்த தன்னை ஜாமீனில் விடுவிக்கக் கோரி கோபால், பூந்தமல்லியில் உள்ள பொடா நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.
மனுவின் மீது இரு தரப்பு வழக்கறிஞர்களும் வாதாடினர். இதற்குப் பின்னர் ஆகஸ்ட் 4ம் தேதிக்கு தீர்ப்பை அறிவிப்பதாக நீதிபதி ராஜேந்திரன் கூறினார்.
இதையடுத்து கோபாலின் காவலும் 4ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார்.
-->











Click it and Unblock the Notifications