16 வயது பெண் கணவருடன் சேர்ந்த வாழ நீதிமன்றம் அனுமதி!
சென்னை:
16 வயதே நிரம்பிய பெண், தனது காதல் கணவருடன் சேர்ந்து வாழலாம் என்று சென்னைஉயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இந்திய அரசியல் சட்டப்படி 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மைனர்களாக கருதப்படுகிறார்கள்.அவர்கள் எடுக்கும் முடிவுகள் சட்டப்படி செல்லாத நிலையும் உள்ளது.
இந் நிலையில், 16 வயதே நிரம்பிய ஒரு பெண், தனது காதல் கணவருடன் சேர்ந்து வாழலாம் என்றுசென்னை உயர்நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
இந்த விவகாரத்தின் நாயகி குமாரி (வயது 16). பள்ளி மாணவி. இவர் படித்து வந்த பள்ளியின்ஸ்கூல் பஸ்சில் பணிபுரிந்து வந்தவர் குமரேசன். பஸ்சில் போகும்போதும் இருவருக்கும் காதல்மலர்ந்தது.
2002ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வீட்டுக்குத் தெரியாமல் இருவரும் திடீர் திருமணம் செய்துக்ொண்டனர். குமாரிக்குத் தாலி கட்டினார் குமரேசன். பள்ளிக்கு மாணவியாகச் சென்ற மகள்,குமரேசனின் மனைவியானதை அறிந்து கொதித்துப் போன குமாரியின் பெற்றோர், சென்னை உயர்நீதிமன்றத்தில் இதை எதிர்த்து வழக்குப் போட்டனர்.
இந்தத் திருமணம் செல்லாது என அறிவிக்கக் கோரினர். மேலும் தங்கள் மகளை நீதிமன்றத்தில்ஆஜர்படுத்துமாறு குமரேசனுக்கு உத்தரவிடக் கோரி ஹேபியஸ் கார்பஸ் (ஆள் கொணர் மனு)மனுவும் தாக்கல் செய்தனர்.
இதை விசாரித்த உயர் நீதிமன்றம் கடந்த ஜூன் 24ம் தேதி வெளியிட்ட உத்தரவில், குமாரி அவரதுதாயார் வீட்டில்தான் இருக்க வேண்டும் என்று அறிவித்தது.
இதைத் தொடர்ந்து தாய் வீடு திரும்பினார் குமாரி. அங்கு, தாலி, மெட்டியை கழற்றி எறியுமாறுகட்டாயப்படுத்தியுள்ளனர் பெற்றோர். முடியாது என்று மறுத்து விட்டார் குமாரி. மேலும் தான்கர்ப்பமாக இருப்பதாகவும் கூறினார்.
இந் நிலையில் ஜூன் 25ம் தேதி தனது வீட்டை விட்டு வெளியேறி மீண்டும் குமரேசனின் வீட்டிற்குச்சென்றுவிட்டார் குமாரி.
அங்கு சென்ற பின்னர் சென்னை தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டிக்கு தனது நிலையை விளக்கியும்,கணவருடன் சேர்ந்து வாழவே தான் விரும்புவதாகவும் கூறி தந்தி அனுப்பினார்.
அந்த தந்தியையே ரிட் மனுவாக பாவித்த தலைமை நீதிபதி, மனு குறித்து விசாரிக்குமாறு மாநநிசட்டப் பணிகள் ஆணையத்துக்கு உத்தரவிட்டார்.
பெண் வழக்கறிஞர் சாந்தகுமாரி இதுகுறித்து விசாரணை நடத்தி நீதிபதியிடம் அறிக்கைசமர்ப்பித்தார்.
அந்த அறிக்கையின் அடிப்படையில், சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி தங்கவேலு தலைமையிலானமுதலாவது டிவிஷன் பெஞ்ச், இந்த வழக்கை மீண்டும் விசாரித்தது.
குமாரியும், குமரேசனும் நேரடியாக வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். இரு தரப்புபெற்றோரும் விசாரிக்கப்பட்டனர். அப்போது கணவருடன்தான் வசிப்பேன் என்று குமாரிஉறுதியாகக் கூறிவிட்டார்.
குமாரிதான் தங்களது மருமகள் என்று குமரேசனின் பெற்றோரும் விடாப்பிடியாக நின்றனர்.
இதைத் தொடர்ந்து மைனர் பெண்ணாக இருந்தாலும், தற்போது கர்ப்பமாக இருப்பதாலும்,கணவருடன்தான் வசிப்பேன் என்று அந்தப் பெண்ணே தெளிவான மன நிலையுடன் கூறிவிட்டதாலும், குமாரியும் குமரேசனும் சேர்ந்து வாழலாம் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
இதைத் தொடர்ந்து குமரேசன் வீட்டிற்கு சந்தோஷத்துடன் திரும்பியுள்ளார் குமாரி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications