கோவையிலும் கஞ்சா சாக்லேட்டுகள்: ராஜஸ்தான் வாலிபர் கைது
கோயம்புத்தூர்:
| சென்னையைத் தொடர்ந்து கோயம்புத்தூரிலும் கஞசா அடங்கிய போதை சாக்லெட்டுகள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக ராஜஸ்தானைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். |
மேலும் பான்பராக் உள்ளிட்ட வஸ்துக்கள் கிடைக்காமல் ஏங்கி வருபவர்களைக் குறி வைத்து கஞ்சா அடங்கியசாக்லேட்டுகளை தமிழகத்தில் இந்தக் கும்பல்கள் குவித்து வருகின்றன.
வட இந்தியாவில் இருந்து வரும் ரயில்களில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இறக்கப்படும் மூட்டைகளில்இந்த சாக்லேட் மூட்டைகளும் வந்திறங்குகின்றன.
இந் நிலையில் தமிழகத்தின் பிர பகுதிகளிலும் இந்த கஞ்சா சாக்லேட் சப்ளை தொடங்கியுள்ளது. இதையடுத்துமாநிலம் முழுவதுமே தமிழக போதைத் தடுப்பு போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந் நிலையில் கோவையில் ராஜஸ்தானைச் சேர்ந்த துக்காராம் என்பவன் கஞ்சா சாக்லேட்களை விற்று வருவதைஅறிந்து அவனிடம் மப்டியில் சென்ற காவலர் ஒருவர், சாக்லேட்டை வாங்கினார். அதில் கஞ்சா இருப்பதுஉறுதியானவுடன் அவனை போலீசார் சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.
அவனிடம் இருந்து 1.3 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. ரயில் நிலையம், பஸ் நிலையம்,கல்லூரிகள், பள்ளிகள் ஆகியவற்றின் அருகே இவன் இந்த சாக்லேட்டுகளை விற்று வந்தான்.
கள்ள நோட்டு டாக்டர் கைது:
கள்ள நோட்டு வியாபாரத்தில் ஈடுபட்ட ஹோமியோபதி டாக்டர் உள்ளிட்ட 4 பேர் கும்பலை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, மார்த்தாண்டம் ஆகிய பகுதிகளில் கள்ள நோட்டுக் கும்பல் நடமாடுவதாகபோலீஸாருக்குத் தெரியவந்தது. இதையடுத்து தக்கலையில் உள்ள ஒரு இடத்திற்கு போலீஸார் மாறு வேடத்தில்சென்றனர்.
அங்கு மறைவான இடத்தில் இருந்த கள்ள நோட்டுக் கும்பலை அணுகிய போலீஸார்,
(படம்- நன்றி தினகரன்) |
அப்போது ரூ. 2 லட்சம் நல்ல நோட்டுக்கள் தந்தால் ரூ. 4 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுக்களைத் தருவதாகஅவர்கள் கூறினர். இதைத் தொடர்ந்து அந்தக் கும்பலை போலீஸார் கைது செய்தனர்.
அவர்களில் ஒருவர் ஹோமியோபதி டாக்டர் என்று விசாரணையின்போது தெரியவந்தது. இவர்களில் 3 பேர்கேரளாவைச் சேர்ந்தவர்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications