இந்தியாவுக்கு நீர்மூழ்கிக் கப்பல்களை வழங்கும் பிரான்ஸ்
சென்னை:
இந்தியாவுக்கு 6 நீர் மூழ்கிகளை வழங்க பிரான்ஸ் முன் வந்துள்ளது. இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் டொமினிக்ஜெரார்ட் இதனைத் தெரிவித்தார்.
சென்னை வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியாவுக்கு 6 நீர்மூழ்கி போர்க் கப்பல்களைக்கொடுப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான தொழில்நுட்பம்இந்தியாவிடம் வழங்கப்பட்டு, இந்தியாவிலேயே இந்த கப்பல்கள் கட்டப்படும்.
இதுதவிர ஏர் பஸ்சிடம் 43 பயணிகள் விமானத்தை வாங்கவும் பிரான்ஸுடன் இந்தியா பேச்சு நடத்தி வருகிறது.
பிரான்சின் நீர் மூழ்கிக் கப்பல்கள், மிகவும் சக்தி வாய்ந்தவை. அணு சக்தி நீர் மூழ்கிக் கப்பல்களுக்கு அடுத்து சிறந்தபோர்க் கப்பல்கள் இவை. இது தவிர மிராஜ் ரக போர் விமானங்கள் வாங்குவது குறித்தும் பிரான்ஸுடன் இந்தியாபேச்சு நடத்தி வருகிறது.
இருப்பினும்,இந்தியாவுக்கும், பிரான்ஸுக்கும், கல்வி மற்றும் நுகர்வோர் பொருள் விற்பனையில் ஒத்துழைப்புசரியாக இல்லை. இந்த இரு பிரிவுகளும் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளன என்றார் அவர்.
ரஷியா, இஸ்ரேலுக்கு அடுத்தபடியாக இந்தியாவுக்கு அதிக ஆயுதங்களை வழங்கும் நாடு பிரான்ஸ் என்பதுகுறிப்பிடத்தக்கது.
முன்னதாக முதல்வர் ஜெயலலிதாவை, ஜெரார்ட் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications