இன்று குரு பெயர்ச்சி: ஆலங்குடியில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
சென்னை:
இன்று நடைபெறும் குருபெயர்ச்சியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் ஆலங்குடியில் உள்ள குருபகவான்ஆலயத்தில் குவிந்து, தரிசனம் செய்தனர்.
குருப்பெயர்ச்சி இன்று இன்று மாலை நடக்கிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் குருபகவானுக்கு சிறப்பு வழிபாடுகளும், அபிஷேக ஆராதனைகளும் நடக்கின்றன.
ஆண்டுக்கு ஒரு முறை பெயர்ச்சியாகும் சுப கிரகமான குரு பகவான், இந்த ஆண்டு இன்று (23ம் தேதி) மாலை 6.27மணிக்கு கடக ராசியில் இருந்து பெயர்ச்சியாகிறார். சிம்ம ராசியில் மகம் நட்சத்திரத்தில் ஓராண்டுகாலம் பிரசேவம்செய்வார்.
குருபெயர்ச்சி முன்னிட்டு கும்பகோணத்தையடுத்து ஆலங்குடியில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருதட்சிணாமூர்த்தியை இன்று சுமார் 6 லட்சம் பக்தர்கள் வழிபட்டனர்.
குரு தட்சிணாமூர்த்திக்கு பால், பழம், பஞ்சாமிர்தம், தயிர், இளநீர், விபூதி, பச்சரிசி மாவு, மஞ்சல் பொடி, தேன்,தங்கம், பன்னீர் ஆகியவற்றால் லட்சக்கணக்கான மக்கள் அபிஷேகம் செய்து வருகின்றனர்.
மேலும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்துள்ளனர். பக்தர்களின் தரிசனத்துக்காக இன்று மாலை முதல்இரவு முழுவதும் விடிய, விடிய கோவில் திறந்திருக்கும். இன்று காலை முதல் நாளை அதிகாலை வரை சுமார் 30லட்சம் பக்தர்கள் குரு பகவானை வழிபடுவர் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
ஆலங்குடியில் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் உள்ள சிவாலயங்களிலும், மற்ற கோவில்களிலும் சிறப்புயாகங்களும் அபிஷேகங்களும் நடை பெற்று வருகின்றன.
கும்பகோணத்தையடுத்து சூரியனார் கோவிலிலும் குரு பெயர்ச்சி விழாவை ஒட்டி சிறப்பு வழிபாடுகளும்தரிசனமும் நடந்து வருகிறது.
இன்று ஆடிக் கிருத்திகை தினமும் சேர்ந்து வந்துவிட்டதால் கும்பகோணம் பகுதியில் உள்ள சுவாமி மலையில்சுவாமிநாத சுவாமிக்கும் சிறப்பு ஆராதனைகள் நடந்து வருகின்றன. மேலும் குருப் பெயர்ச்சிக்கான விஷேசபூஜைகளும் நடந்து வருகின்றன.
வழக்கமாக ஆடிக் கிருத்திகையின்போது காவிரியில் பக்தர்கள் புனித நீராடுவர். ஆனால், காவிரி வறண்டுகிடப்பதால் புனித நீராடல்கள் சாத்தியமில்லாமல் போய்விட்டது.
(இன்று முதல் குருப் பெயர்ச்சி பலன்கள் தட்ஸ்தமிழ்.காமில் வெளியாகும்)
-
குருப்பெயர்ச்சி: மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு என்ன பலன்? யாருக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது? -
குருப்பெயர்ச்சி 2026: பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் யார்? குரு அருளால் அதிர்ஷ்ட மழை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications